நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த மஷ்ரூம் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது
இதையும் படியுங்கள்: செட்டிநாடு ஆம்லெட் பிரியாணி செய்வது எப்படி ?
இரண்டு முறை இது போன்ற மஷ்ரூம் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான மஷ்ரூம் ஆம்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த மஷ்ரூம் ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
மஷ்ரூம் ஆம்லெட் | Mushroom Ambleat Receipe in Tamil
Equipment
- 1 தோசை கல்
- 1 தோசை கரண்டி
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 1 cup காளான்
- 1 வெங்காயம்
- 1 tbsp சாட் மசாலா
- 1 tbsp மிளகு தூள்
- 2 tbsp வெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை
- மஷ்ரூம் ஆம்லெட் செய்ய முதலில் ஒரு பாத்திரத்தில், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.
- மற்றொரு வாணலியில், வெண்ணெயை போட்டு உருகியதும், காளான் மற்றும் வெங்காயத்தை போட்டு, 2 நிமிடம் வதக்கி, உப்பு சிறிது தூவி, மறுபடியும் நன்கு கிளறவும்.
- அடுப்பில் தவா வைத்து, அதில் முட்டை கலவையை தோசைப் போல் ஊற்றி, இருபுறமும் வேக வைத்து, பிறகு அதனை ஒரு தட்டில் வைத்து, அதன் மேல் அந்த காளானை பரப்பி, சாட் மசாலாவை தூவி, மடக்கி பரிமாறவும்