கறி குழம்பையே மிஞ்சும் ருசியில் காளான் குழம்பை ஒருமுறை இப்படி செய்து பாருங்க!

- Advertisement -
Print
5 from 1 vote

காளான் குழம்பு – Mushroom Gravy Recipe in Tamil

குழந்தைகளும் சரி, வீட்டில் உள்ள மற்றவர்களும் சரி, ஆரோக்கியமான காய்கறிகளை தவிர்ப்பதையே வழக்கமாக கொண்டிருப்பார்கள். எனவே சத்தான உணவுகள் அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தை கொடுப்பதில்லை. எனவே குழந்தைகள் விரும்பும் விதத்திலும், சுவையிலும் சத்தான உணவு வகைகளை செய்து கொடுப்பது என்பது மிகவும் அவசியமாகிறது. அவ்வாறு ஊட்டச்சத்து நிறைந்த காளான் குழம்பை எவ்வாறு கறிக் குழம்பின் சுவையில் சமைப்பது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Gravy, LUNCH
Cuisine: tamilnadu
Keyword: mushroom gravy
Yield: 4
Calories: 162kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ காளான்
  • 1 தக்காளி
  • 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  • 2 பட்டை
  • 3 கிராம்பு
  • 1 தேக்கரண்டி சோம்பு
  • 1 வெங்காயம்
  • உப்பு தேவையானஅளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

  • 2 காய்ந்த மிளகாய்
  • 3 மேஜைக்கரண்டி தனியா
  • 1 மேஜைக்கரண்டி சீரகம்
  • 1/2 மேஜைக்கரண்டி மிளகு
  • கொத்தமல்லி தழை சிறிதளவு
  • 1 இன்ச் அளவு இஞ்சி
  • 5 பல் பூண்டு

செய்முறை

  • முதலில் காளானை நன்றாக சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவேண்டும். வெங்காயம், தக்காளியையும் நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் கடாய் வைத்து காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு எல்லாவற்றையும் லேசாக வறுத்து சிறிது நேரம் ஆறவிடவும்.
  • ஆறிய பின்னர் கொத்தமல்லி  சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும். தேங்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை தனியாக அரைத்து கொள்ளவும். காடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, சோம்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும்.
  • பிறகு வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் காளான் மற்றும் அரைத்த மசாலா, மஞ்சள் தூள், உப்பு இவற்றுடன் 200 மி.லி தண்ணீர்சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • மசாலா வாடை அடங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி  விடவும்.சுவையான காளான் குழம்பு தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 162kcal | Carbohydrates: 16g | Fat: 7.7g | Cholesterol: 30mg | Sodium: 274mg | Potassium: 242mg