ருசியான காளான் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு அசத்தலாக இருக்கும்!

- Advertisement -

உலகில் பல நூறு வகையான உணவு வகைகள் இருக்கின்றன. இதில் நாம் அவ்வப்போது உண்ணாத உணவு வகைகளும் பல உண்டு. அப்படி நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான்.உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும்.

-விளம்பரம்-

காளான் பக்கோரா|காலன் பக்கோடா |சாலையோர காளான். இந்த செய்முறை மிகவும் எளிமையானது, சுவையானது மற்றும் சிறந்த மழைக்கால சிற்றுண்டி செய்முறையாகும். இது சிறந்த தெரு உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த பதிவில் சுவையான காளான் பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

காளான் பக்கோடா | Mushroom Pakkoda Recipe in Tamil

உலகில் பல நூறு வகையான உணவு வகைகள் இருக்கின்றன. இதில் நாம் அவ்வப்போது உண்ணாத உணவு வகைகளும் பல உண்டு. அப்படி நாம் வழக்கமாக சாப்பிடாத உணவு பொருள்களில் ஒன்று தான் காளான்.உடலிலில் ஓடும் ரத்தத்திற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம் ஆகும். இந்த இரும்புச்சத்து உடலுக்கு வலுசேர்த்து காயங்களிலிருந்து உடலை வேகமாக ஆற்றும் வேலையை திறம்பட செய்கிறது. செம்பு சத்து ஈரலின் பணிகளை திறம்பட செய்ய ஊக்குவிக்கிறது. காளான் இந்த இரண்டு சத்துக்களையும் அதிகம் கொண்டது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: mushroom pakoda
Yield: 4 People
Calories: 22kcal

Equipment

 • 1 கடாய்
 • 1 கரண்டி
 • 1 பவுள்

தேவையான பொருட்கள்

 • 1 பாக்கெட் மஸ்ரூம்
 • 1 நறுக்கிய பெரிய வெங்காயம்
 • 5 பூண்டு பல்
 • 2 டீஸ்பூன் மிளகாய் தூள்
 • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்  
 • 1 டீஸ்பூன் கரம் மசாலா 
 • 1/4 கப் கடலைமாவு
 • 2 டீஸ்பூன் நெய் (அ) எண்ணெய்
 • 1/4 கப் அரிசி
 • எண்ணெய் பொரிப்பதற்கு
 • கருவேப்பிலை            நறுக்கியது

செய்முறை

 • ஒரு பவுலில் மஷ்ரூமை நீளவாக்கில் வெட்டி வைக்கவும்.
 • பிறகு இதனுடன் நீளவாக்கில் வெட்டிய வெங்காயம், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, பூண்டு, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
 • இத்துடன் மிளகாய் தூள்,கரம் மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
 • இப்போது மஸ்ரூமிலிருந்து தண்ணீர் வெளிவர ஆரம்பிக்கும் அது வரை பிசையவும்.
 • இப்போது இதனுடன் கடலை மாவு, அரிசி மாவு, எண்ணெய் சேர்த்து நன்றாக பிசையவும்.
 • இதற்கு தண்ணீர் விட தேவையில்லை. மஷ்ருமிலிருந்து வெளியேறிய தண்ணியே சரியாக இருக்கும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் மிதமான தீயில் சிறிது சிறிதாக சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
 • இந்த மாலை வேளையில் மழை போல் பொழியும் நேரத்தில் சூடான காபி அல்லது டீ யுடன் இதனை சுவைத்து மகிழுங்கள்.

Nutrition

Serving: 500g | Calories: 22kcal | Carbohydrates: 4.3g | Protein: 8.5g | Fat: 0.1g | Sodium: 30mg | Iron: 0.16mg

இதனையும் படியுங்கள் : ருசியான வெஜிடபுள் பக்கோடா இப்படி செய்து பாருங்க! மொறு மொறுனு இதன் சுவையே தனி தான்!