Home சைவம் ருசியான கடுகு தக்காளி சட்னி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே...

ருசியான கடுகு தக்காளி சட்னி இப்படி ஒரு தடவை செய்து பாருங்க! 2 இட்லி அதிகமாவே சாப்பிடுவாங்க!

எல்லாரும் இட்லி தோசைக்கு தக்காளி சட்னி அரைச்சு சாப்பிட்டிருப்போம். தக்காளி போட்டு மல்லி சட்னி கூட அரைச்சு சாப்பிட்டு இருப்போம் தக்காளி தொக்கு சாப்பிட்டிருப்போம் தக்காளி குருமா சாப்பிட்டிருப்போம் ஆனால் கடுகும் தக்காளியும் சேர்த்து சட்னி அரைச்சு இதுவரைக்கும் நம்ம சாப்பிட்டு இருக்கவே மாட்டோம். ஆனா ஒரு தடவை கடுகு தக்காளி சட்னி செஞ்சு சாப்பிட்டு பாருங்க ரெண்டு இட்லி சாப்பிடுற இடத்துல நாலு இட்லி சாப்பிடுவாங்க. அந்த அளவுக்கு இந்த சட்னி ஓட டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

இட்லி தோசை சப்பாத்தி சாதத்தில் கூட போட்டு பிசைந்து சாப்பிடலாம். நம்ம எப்பவுமே வீட்ல கொஞ்சம் டிஃபரண்ட் டிஃபரண்டா ஏதாவது செஞ்சு கொடுத்தா தான் நமக்கு சமைக்கிறதுல ஆர்வம் வரும் சாப்பிடறவங்களுக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். அந்த வகையில ரொம்பவே டேஸ்டா இருக்க கூடிய இந்த கடுகு தக்காளி சட்னி கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் நம்ம ஊறுகாய் தான் கடுக வருது அரைச்சி சேர்த்திருப்போம் ஆனால் முதல் தடவையா இந்த கடுகும் தக்காளியும் சேர்த்து சட்னி அரைச்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த சட்னிக்கு ரொம்பவே அடிக்ட் ஆகி விடுவீங்க.

அந்த அளவுக்கு டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். முக்கியமா குழந்தைகளுக்கு இந்த சட்னி கொஞ்சம் காரம் கம்மி பண்ணி கொடுத்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்போவுமே நம்ம மதியம் லஞ்சுக்கு இட்லி தோசை சப்பாத்தி கொடுத்து விட்டால் தக்காளி சட்னி தான் கொடுத்து விடுவோம் அதையே சாப்பிட்டு குழந்தைகளுக்கு போரடிச்சு இருக்கும் இல்லையா. அப்போ அவங்களுக்கு இந்த கடுகு தக்காளி சட்னியை செஞ்சு கொடுங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டான அட்டகாசமான வித்தியாசமான கடுகு தக்காளி சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4 from 2 votes

கடுகு தக்காளி சட்னி | Mustard Tomato Chutney In Tamil

இட்லி தோசை சப்பாத்தி சாதத்தில் கூட போட்டு பிசைந்துசாப்பிடலாம். நம்ம எப்பவுமே வீட்ல கொஞ்சம் டிஃபரண்ட் டிஃபரண்டா ஏதாவது செஞ்சு கொடுத்தாதான் நமக்கு சமைக்கிறதுல ஆர்வம் வரும் சாப்பிடறவங்களுக்கும் கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்காஇருக்கும். அந்த வகையில ரொம்பவே டேஸ்டா இருக்க கூடிய இந்த கடுகு தக்காளி சட்னி கண்டிப்பாஎல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இதுவரைக்கும் நம்ம ஊறுகாய் தான் கடுக வருது அரைச்சிசேர்த்திருப்போம் ஆனால் முதல் தடவையா இந்த கடுகும் தக்காளியும் சேர்த்து சட்னி அரைச்சுசாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்க இந்த சட்னிக்கு ரொம்பவே அடிக்ட் ஆகி விடுவீங்க
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Mustard Tomato Chutney
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 3 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 3 டேபிள் ஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 3 தக்காளி
  • 6 காய்ந்த மிளகாய்
  • 6 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளிக்கவும்.
  • பிறகு அதில் உளுந்தம் பருப்பு தக்காளி காய்ந்த மிளகாய் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாகவதக்கவும்
  • இதனை ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை போட்டு பொரியவும் அதனை சட்னியில் சேர்த்து விட்டால்சுவையான கடுகு தக்காளி சட்னி தயார்

Nutrition

Serving: 250g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 26g | Sodium: 71mg | Potassium: 328mg

இதையும் படியுங்கள் : ருசியான அதே நேரம் ஆரோக்கியமான தூதுவளை சட்னி! வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!