ருசியான  மட்டன் வெங்காய மசாலா இப்படி தான் இருக்கனும்! இதன் ருசியே தனி ருசி தான்!

- Advertisement -

அசைவம் என்றாலே போதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும் எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம், ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

இந்த மட்டன் வெங்காய மசாலா அருமையான சுவையில் சுலபமாக செய்து விடலாம்.

- Advertisement -

இந்த மட்டன் வெங்காய மசாலா எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த கிரேவி செய்து சுட சுட சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

அசைவம் என்றாலே வெங்காயம் சேர்த்து தான் செய்வோம் இருப்பினும் மட்டன் வெங்காய மசாலா என்று தனி பெயர் ஏன் என்றல். இதில் மட்டன் அளவிற்கு தகுந்த மாதிரி அதே அளவில் வெங்காயம் சேர்த்து இந்த மசாலா செய்யப்படுவதால் ,இதன் ருசி இன்னும் மேன்படும். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

மட்டன் வெங்காய மசாலா | Mutton Onion Masala In Tamil

அசைவம் என்றாலேபோதும் எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊற ஆரமித்து விடும். அசைவத்தில் எல்லோருக்கும்எல்லாம் பிடிக்கணும் என்று அவசியம் இல்லை, ஒரு சிலருக்கு, கோழி, இறால், நண்டு பிடிக்கலாம்,ஒரு சிலர் ஆட்டுக்கறி குழம்பு விரும்பி சாப்பிடுவாங்க. இந்த மட்டன் வெங்காய மசாலா அருமையான சுவையில் சுலபமாக செய்து விடலாம். சுட சுட சாதம்,இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற வற்றுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Mutton Onion Masala
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ மட்டன்
  • 1/2 கப் தேங்காய் எண்ணெய்
  • 2 டீஸ்பூன் சோம்பு
  • 1 துண்டு பட்டை
  • 2 ஏலக்காய்
  • 2 கிராம்பு
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 கிலோ வெங்காயம்
  • 2 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பச்சை மிளகாய்
  • 2 தக்காளி அரைத்துக் கொள்ளவும்
  • 2 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் சீரகத் தூள்
  • 1/2 டீஸ்பூன்  கரம் மசாலா
  • உப்பு சுவைக்கேற்ப
  • கொத்தமல்லி சிறிது

செய்முறை

  • முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவிக் கொள்ளவேண்டும். பின்னர் அந்த மட்டனில் சிறிது உப்பு சேர்த்துநன்கு பிரட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மட்டனை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, அதை ருக்கரில் போட்டு,தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.
  • பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து,அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு பிரியாணி இலை, சீரகம்சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது உப்பு தூசி நன்கு வதக்க வேண்டும்.
  • பிள் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்துநன்கு வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும். அடுத்து, அதில் மசாலா பொடிகள் மற்றும் உப்புசேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
  • பின்பு வேக வைத்துள்ள மட்டன் மற்றும் நீரை ஊற்றி கிளறி, வாணலியை மூடி வைத்து, குறைவானதீயில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மட்டன் வெங்காயமசாலா தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Sugar: 2.3g | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு பெப்பர் மட்டன் ரோஸ்ட், இத ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க!

-விளம்பரம்-