கொங்குநாடு ஸ்பெஷல் கிராமத்து நாட்டு கோழி சாறு ஒருமுறை இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

நாட்டு கோழிச்சாறு நம்ம வீட்டிலேயே ரொம்ப சுலபமாக எப்படி செய்வது? நாவூரும் சுவையில் நாட்டு கோழிச்சாறு !கொங்குநாடு ஸ்பெஷல் நாட்டு கோழிச்சாறு பாரம்பரிய முறையில்  செய்யப்படுவது உண்டு. இன்று அது பலருக்கு தெரியாமலேயே போய்விட்டது. செய்யும் போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் நாட்டுக் கோழிச்சாறு. இதை செய்த கைக்கு நிச்சயம் தங்க வளையல் உண்டுங்க

-விளம்பரம்-

ரொம்பவே ருசியாக புளிப்பும், காரமும் கொண்ட இந்த நாட்டு கோழிச்சாறு ஆரோக்கியம் மிகுந்ததும் கூட! . நாட்டு கோழிச்சாறு தொண்டைக்கு இதமாகவும், சளி பிடிக்காமல் இருக்கவும் செய்யும் இந்த நாட்டு கோழிச்சாறு எப்படி நம் வீட்டிலும் சுலபமாக செய்யலாம்? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம். புரத சத்துகளை பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது நல்லது. 

- Advertisement -

ருசியாக நாட்டுக் கோழிச்சாறு சமைத்து கொடுத்தால் வீட்டில் அனைவரும் பாராட்டுவார்கள்.பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு நாட்டுக் கோழிச்சாறு தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்

Print
5 from 1 vote

நாட்டுக் கோழிச்சாறு | Naattu Kozhisaaru Recipe In Tamil

ரொம்பவே ருசியாக புளிப்பும்,காரமும் கொண்ட இந்த நாட்டு கோழிச்சாறு ஆரோக்கியம் மிகுந்ததும் கூட! . நாட்டு கோழிச்சாறுதொண்டைக்கு இதமாகவும், சளி பிடிக்காமல் இருக்கவும் செய்யும் இந்த நாட்டு கோழிச்சாறுஎப்படி நம் வீட்டிலும் சுலபமாக செய்யலாம்? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம். புரத சத்துகளை பெறுவதற்காக நாட்டுக்கோழி சமைத்துத் தருவது நல்லது.  ருசியாக நாட்டுக் கோழிச்சாறு சமைத்து கொடுத்தால்வீட்டில் அனைவரும் பாராட்டுவார்கள்.பாராட்டை கொடுக்கக் கூடிய ஒரு நாட்டுக் கோழிச்சாறுதான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Kulambu
Cuisine: tamil nadu
Keyword: Nattu KozhuSaaru
Yield: 4
Calories: 658kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ நாட்டுக் கோழி
  • 100 கிராம் சின்ன வெங்காயம்
  • 2 தக்காளி
  • 6 பச்சைமிளகாய்
  • 6 பல் பூண்டு
  • 1 துண்டு இஞ்சி
  • 1 டம்ளர் துவரம்பருப்பு
  • 2 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 ஏலக்காய்
  • 10 கிராம் சோம்பு
  • 10 கிராம் சீரகம்
  • 10 கிராம் காய்ந்தமிளகாய்
  • 1/2 கட்டு கொத்தமல்லி
  • 1/2 கட்டு புதினா
  • கறிவேப்பிலை தேவைக்கு
  • உப்பு தேவைக்கு
  • 1/4 லிட்டர் நல்லெண்ணெய்

செய்முறை

  • சிக்கனை உரலில் போட்டு நன்றாக இடித்துக் கொள்ளவும். அதேபோல் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு ஆகியவற்றையும் இடித்துக் கொள்ளவும்.
  • பின்னர் கடாயில் சோம்பு, சீரகம், காய்ந்தமிளகாய், மிளகை வறுத்து அவை ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் நல்லெண்ணெயை காயவைத்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, இடித்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு கலவை போட்டு நன்கு வதக்கி, சிக்கன் துண்டுகளையும் வதக்கவும். போட்டு நன்றாக
  • பின் அரைத்த மசாலா பொடி, தக்காளி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, துவரம்பருப்பு, தண்ணீர் 2 லிட்டர் ஊற்றி கொதிக்க விடவும்.
  • சிக்கன் மற்றும் துவரம்பருப்பு நன்கு வெந்து தண்ணீர் நன்கு சுண்டி வந்ததும் இறக்கவும். தயார்.சூடாக பரிமாறவும். நாட்டுகோழிச்சாறு

Nutrition

Serving: 400g | Calories: 658kcal | Carbohydrates: 12g | Protein: 23g | Cholesterol: 23mg | Sodium: 565mg | Potassium: 455mg | Calcium: 56mg