ருசியான மண் சட்டி நண்டு மசாலா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்! கொஞ்சம் கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை.கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதுவரை எத்தனையோ வகையான நண்டு உணவுகளை சுவைத்திருப்பீர்கள். ஆனால் மண் சட்டியில் செய்து சுவைத்ததுண்டா? ஆம் நண்டு மசாலாவை மண் சட்டியில் செய்யும் வழக்கம் இன்றளவும் உள்ளது. இது மிகவும் சுவையானது மற்றும் நன்கு காரசாரமாகவும் இருக்கும். மேலும் இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட ஏற்றவாறும் இருக்கும். நண்டில் அதிக அளவிலான புரோட்டின் சத்துக்கள் இருப்பதால், அனைத்து வயதினரும் இதனை சாப்பிடுவது நல்லது. ஏனெனில், தசைகளின் சீரமைப்புக்கு உதவுகிறது. நண்டில் நியாசின் அதிகமாக உள்ளது. இது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் கிளிசரைடு அளவை குறைக்கும். நண்டு உடலில் எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்தும். இதனால் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். சளி தொல்லை இருப்பவர்கள் தொடர்ந்து நண்டு சாப்பிட்டு வந்தால் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும். எனவே வாரத்தில் இரண்டு முறையாவது உணவில் கட்டாயம் நண்டு சேர்த்து கொள்ள வேண்டும். இவ்வளவு சத்து நிறைந்த நண்டை வைத்து காரசாரமான நண்டு மசாலா மண் சட்டியில் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

மண் சட்டி நண்டு மசாலா | Nandu Masala Recipe In Tamil

பொதுவாகவே கடல் உணவுகளில் அனைவருக்கும் பிடித்த அதேசமயம் சற்று பயமுறுத்தும் உணவென்றால் அது நண்டு தான். கடல் உணவுகளில் ஒன்றாக இருக்கும் நண்டு அசைவ பிரியர்களின் அதிகம் பிடித்தாக இருக்கின்றது. பொதுவாகவே கடல் உணவுகளை அசைவ பிரியர்கள் அதிகமாகவே விரும்பி உண்கின்றனர். இதன் சுவைக்கு ஒட்டுமொத்த நபர்களும் அடிமையாகிவிடுவார்கள். மீன் வகைகளைக் காட்டிலும், நண்டு, இறால் வகைகளின் சுவைகளுக்கு அடிமையாகாத அசைவப் பிரியர்கள் இருக்கவே மாட்டார்கள். இது மிகவும் சுவை மிகுந்த உணவாகும். ஆரோக்கியத்திலும் நண்டு மற்ற கடல் உணவுகளுக்கு சளைத்ததில்ல்லை. கடல் உணவுகளில் ஒன்றான நண்டு சளி, இருமலுக்கு சிறந்த தீர்வு அளிக்கின்றது. சளி, இருமல் என்ற தொந்தரவு ஏற்பட்டாலே நண்டு வாங்கி சமைத்து சாப்பிடுபவர்கள் அதிகம். அதுவும் நண்டு குழம்பு சூடான சாதத்தில் ஊற்றி சாப்பிட அருமையாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: nandu masala
Yield: 4 People
Calories: 90kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 மண் சட்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி நண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 5 வர ‌மிளகாய்
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் நண்டை நன்கு சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, மல்லி, ஏலக்காய், காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு மண்‌ சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வேக விடவும்.
  • பின் அரைத்த விழுது மற்றும் உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு பச்சை வாசனை போக கொதிக்க விடவும்.
  • மசாலா நன்கு கொதித்ததும் நண்டை சேர்த்து 15 நிமிடங்கள் வரை வேக விடவும். நண்டில் எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான நண்டு மசாலா தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 90kcal | Carbohydrates: 2.3g | Protein: 19g | Fat: 4g | Sodium: 320mg | Potassium: 347mg | Vitamin A: 8IU | Vitamin C: 24mg | Calcium: 50mg | Iron: 12mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் நண்டு ரோஸ்ட் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!