காரசாரமான ருசியில் நண்டு மிளகு வறுவல் ஒரு முறை இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

அசைவ உணவுகளால் மீன், மட்டன், சிக்கனுக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி சாப்பிடுவது நண்டு. நாண்டில் புரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலினீயம், விட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளது. நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் நண்டு மிளகு மசாலா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக அசைவ பிரியர்களில் கடல் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த கடல் உணவுகளை எப்படி பக்குவமாக சமைப்பது என்று தெரியாது. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் நீங்கள் இதுபோன்று இந்த நண்டு மிளகு வறுவலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். உங்களை அடிக்கடி இந்த நண்டு கிரேவியை செய்ய சொல்லி வற்புறுத்துவார்கள்.

-விளம்பரம்-

நண்டில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான விட்டமின் B12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்த சோகை பிரச்சனை ஏற்படுவதை தடுக்கிறது. நண்டில் புரோட்டீன் அதிகம் உள்ளது. அதே சமயம் இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் மழைக்காலத்தில் இதனை சாப்பிடுவது உடலுக்கு இதமாக இருக்கும். மேலும் நண்டு உடல் வலிமையை அதிகரிக்கும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளது. தீராத நெஞ்சுச் சளி, கபம், இருமல், ஆஸ்துமா பிரச்னைகளுக்கு நண்டு சமையல் சிறந்த நிவாரணம் தரும். ஆற்று நண்டை இடித்து சாறு செய்து குடித்தால் தலைபாரம் நீங்கி நீர் இறங்கிவிடும். மூக்கிலிருந்து தண்ணீர் ஒழுகுவது நிற்கும். மிளகு சேர்த்து காரமான நண்டு பொரியல் அல்லது வறுவல் செய்து சாப்பிட்டால் நெஞ்சுச்சளி, கபம் நீங்கி விடும். தோசை, இட்லி, நாண், சப்பாத்தி, சாம்பார் சாதம், சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையான நண்டு வறுவல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
5 from 1 vote

நண்டு மிளகு வறுவல் | Nandu Milagu Varuval Recipe In Tamil

அசைவ உணவுகளால் மீன், மட்டன், சிக்கனுக்கு அடுத்தபடியாக அனைவரும் விரும்பி சாப்பிடுவது நண்டு. நாண்டில் புரோட்டின், ஒமேகா 3 பேட்டி ஆசிட், செலினீயம், விட்டமின் பி2, காப்பர் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளது. நண்டு ரெசிபி பல இருந்தாலும் நண்டினை பெரும்பாலும் கிரேவி செய்து சாப்பிடுவார்கள். ஆகவே, இப்பதிவில் நண்டு மிளகு மசாலா எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம் வாங்க. பொதுவாக அசைவ பிரியர்களில் கடல் உணவை விரும்பி சாப்பிடுபவர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். ஆனால் சிலருக்கு அந்த கடல் உணவுகளை எப்படி பக்குவமாக சமைப்பது என்று தெரியாது. இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம் நீங்கள் இதுபோன்று இந்த நண்டு மிளகு வறுவலை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Nandu Milagu Varuval
Yield: 4 People
Calories: 90kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1/2 கி நண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்

செய்முறை

  • முதலில் நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கறிவப்பிலை, இஞ்சி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து நன்கு ‌வதக்கவும்.
  • தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடங்கள் கழித்து கழுவிய நண்டை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • நண்டு நன்கு வெந்து தண்ணீர் சுண்டி வந்ததும் மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான நண்டு மிளகு வறுவல் தயார். இதனை சாதம், இட்லி, தோசை என்று அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 600g | Calories: 90kcal | Carbohydrates: 6.5g | Protein: 19g | Fat: 1.5g | Sodium: 320mg | Potassium: 275mg | Vitamin C: 6mg | Calcium: 50mg | Iron: 4mg

இதனையும் படியுங்கள் : ருசியான செட்டிநாடு நண்டு தண்ணீர் குழம்பு, இட்லி தோசை சாதம் என அனைத்திற்கும் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்!!!