கறிக்குழம்பை மிஞ்சும் சுவையில், நவரத்தின கிரேவி ஒரு தரம் வீட்டில் செய்து பாருங்க! ஒரு சட்டி சோறும் காலியாகும்!

- Advertisement -

அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில், அசைவ சாப்பாடு சாப்பிட வேண்டும். கறி குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது, கொண்டைக்கடலை,பட்டாணி மொச்சையை வைத்து இப்படி ஒரு கிரேவிசெய்து சாப்பிடுங்கள். நிறைவான அசைவ குழம்பு சாப்பிட்ட திருப்தியை இந்த கிரேவி உங்களுக்கு கொடுக்கும். மிக மிக சுலபமான முறையில் ஒரு ‘நவரத்தின கிரேவி’ எப்படி செய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் முதல் நாள் இரவே அனைத்து கடலை வகையை தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய கடலை வகையை வைத்து இந்த நவரத்தின கிரேவி செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

பெரும்பாலானோர் மூன்று வேளையும் உண்ணும் உணவு சாதம் மற்றும் குழம்பாகத் தான் இருந்தது. ஆனால் இப்போது பார்த்தோமென்றால் காலை டிபன், மதியம் சாப்பாடு, இரவு டிபன் என்று மூன்று வேளையும் வித்தியாசமான உணவுகளை சமைக்க வேண்டி உள்ளது. இதனால் பெண்களுக்கு வேலை அதிகமாகவே இருக்கிறது. பெண்களின் வேலையை சற்று குறைக்க இந்த நவரத்தின கிரேவி காலையில் வைத்துவிட்டால் காலை உணவு மற்றும் மதிய உணவிற்கும் சேர்த்து சத்துடனோ,புலாவ் போன்றவற்றுக்கு சேர்த்து சாப்பிடலாம்.

- Advertisement -

நவரத்தின கிரேவி நம் வீட்டிலேயும் சுவையாக செய்து அசத்த முடியும். சுலபமான முறையில், கொஞ்சம் வித்தியாசமாக, இந்த மசாலாவை எப்படி செய்வது, என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இது சுவையானது. ஆரோக்கியமானது. இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு ஏற்ற நவரத்தின கிரேவி என்று கூட சொல்லலாம்! சரி வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
No ratings yet

நவரத்தின கிரேவி | Navarathna Gravy Recipe In Tamil

அசைவம் சாப்பிட முடியாத நேரங்களில், அசைவ சாப்பாடுசாப்பிட வேண்டும். கறி குழம்பு ஊற்றி சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது,கொண்டைக்கடலை,பட்டாணி மொச்சையை வைத்து இப்படி ஒரு கிரேவிசெய்து சாப்பிடுங்கள். நிறைவானஅசைவ குழம்பு சாப்பிட்ட திருப்தியை இந்த கிரேவி உங்களுக்கு கொடுக்கும். மிக மிக சுலபமானமுறையில் ஒரு ‘நவரத்தின கிரேவி’ எப்படிசெய்வது தெரிந்துகொள்வோம் வாருங்கள். முதலில் முதல் நாள் இரவே அனைத்து கடலை வகையை தண்ணீரில்போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 8 மணி நேரம் ஊறிய கடலை வகையை வைத்து இந்த நவரத்தினகிரேவி செய்து பாருங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Gravy
Cuisine: tamil nadu
Keyword: Navaratna Gravy
Yield: 4
Calories: 332kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 50 கிராம் பட்டாணி
  • 50 கிராம் கொண்டைகடலை
  • 50 கிராம் சோயா பீன்ஸ்
  • 50 கிராம் மொச்சை
  • 50 கிராம் பாசிப்பயிறு
  • 50 கிராம் காரட்
  • 50 கிராம் பீன்ஸ்
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளரு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
  • 1/2 மூடி தேங்காய்
  • 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1 தேக்கரண்டி மல்லி தூள்
  • கறிவேப்பில்லை சிறிது
  • கொத்தமல்லி சிறிது
  • 1 தேவைகேற்ப எண்ணெய்
  • உப்பு தேவைகேற்ப

செய்முறை

  • முதலில் தானிய வகைகளை 8 மணி நேரம் நன்கு ஊறவைக்கவும், இஞ்சி, பூண்டு, தேங்காய், மிளகு, சீரகம் ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
  • பிறகு பின்ஸ், காரட், உருளைக்கிழங்கு, தக்காளி அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.
  • பிறகு ஒரு வானாலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம், தக்காளியைப் போட்டு வதக்கவும்.
  • சிறிது சிவந்தவுடன் இஞ்சி, பூண்டுவிழுது, கரம் மசாலா, மிளகு தூள், மல்லி தூள், காய்கறிகள் ஆகியவற்றைப் போட்டு வதக்கி தானியங்களையும் அதில் போட்டு விடவும்.
  • உப்பு,தேங்காய் விழுது சேர்த்து நன்கு வதக்கி சிறிது தண்ணீர் விட்டு 15 நிமிடம் கொதிக்கவிடவும். இறக்கும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு இறக்கி பரிமாறவும்.

Nutrition

Serving: 100g | Calories: 332kcal | Carbohydrates: 83g | Protein: 7g | Fat: 1g | Sodium: 587mg | Potassium: 421mg | Fiber: 10g | Sugar: 4g | Vitamin A: 4841IU | Calcium: 89mg | Iron: 3mg