- Advertisement -
நாம் அனைவரும் விரும்பி ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்போம், சபரிமலை ஸ்பெஷல்
நெய் அப்பம் ,மிகவும் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல் திக்திக்கும் ருசியில் இருக்கும். கோவில்களில் கிடைக்கும் இதனை நம் வீட்டிலும் செய்து
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : ருசியான பாய் வீட்டு நெய் சோறு இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
உண்ணலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய் அப்பம் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த நெய் அப்பம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம்| Nei Appam Receipe in Tamil
நாம் அனைவரும் விரும்பி ஒரு முறையாவது சாப்பிட்டு இருப்போம், சபரிமலை ஸ்பெஷல் நெய் அப்பம் ,மிகவும் சுவையாக இருப்பது மட்டும் இல்லாமல் திக்திக்கும் ருசியில் இருக்கும். கோவில்களில் கிடைக்கும் இதனை நம் வீட்டிலும் செய்து உண்ணலாம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெய் அப்பம் விரும்பி உண்பர். அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.அதனால் இன்று இந்த நெய் அப்பம் செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
Yield: 4 people
Calories: 415kcal
Equipment
- 1 பனயார சட்டி
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 ½ cup அரிசி
- 1 cup நாட்டுச் சர்க்கரை
- 1 நேந்திரம் பழம்
- ¼ tsp ஏலக்காய் தூள்
- ¼ tsp சமையல் சோடா உப்பு
- ¼ cup துருவிய தேங்காய்
- 2 tbsp நெய்
செய்முறை
- நெய் அப்பம் செய்யப் முதலில் அரிசியை நன்கு கழுவி 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் நன்கு பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து கொள்ள வேண்டும்
- பின்னர் நாட்டுச் சர்க்கரையை தண்ணீர் கலந்து காய்ச்சிக் கொள்ள வேண்டும் அல்லது நாட்டுச் சர்க்கரையை அப்படியே சேர்த்துக் கொள்ளலாம்.
- அதனை ஊற வைத்த அரிசி யை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி கொள்ள வேண்டும். பின் மிக்ஸி ஜாரில் ஊற வைத்த அரிசி, நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை அடித்துக் கொள்ள வேண்டும்.
- அதன் பின் தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் ஆகியவற்றை சேர்ந்து கலந்து அடித்துக் கொள்ள வேண்டும். இதில் நாட்டுச் சர்க்கரை காய்ச்சவில்லை என்றால் அரிசியை மட்டும் மிக்ஸி ஜாரில் அடுத்து தனியா எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் நாட்டுச் சர்க்கரை தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் ஆகியவற்றை மட்டும் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதன் கலவை 4மணி நேரம் ஊற விட வேண்டும்.அப்படி இல்லை என்றால் சிறிது சோடா உப்பு சேர்த்து கலவையை புளிக்க வைக்க வேண்டும்.
- கலவை ஒரு மணி நேரத்தில் தயாராகி விடும். இப்பொழுது பனயார சட்டியில் நெய் ஊற்றி கலவையை அதில் குளியல் ஊற்ற வேண்டும்.
- பின் அப்பம் ஒரு சைடு வெந்ததும் மறுபுறம் திருப்பி போட வேண்டும். இப்பொழுது சுவையான நெய் அப்பம் ரெடி.
Nutrition
Serving: 300gm | Calories: 415kcal | Carbohydrates: 34g | Cholesterol: 2.3mg | Sodium: 453mg | Potassium: 1092mg | Fiber: 1.3g | Sugar: 12.4g | Calcium: 12mg