வீட்டு வாசலில் தண்ணீர் இப்படி தெளியுங்கள் எந்த கெட்ட சக்தியும் உள்ள வராது!

- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் குலதெய்வம், ஊர் தெய்வம், காவல் தெய்வம் போன்ற நல்ல சக்தி நுழைவதாக இருந்தாலும், அது நிலை வாசலின் வழியாகத்தான் உள்ளே நுழையும். ஏவல், பில்லி, சூனியம் போன்ற கெட்ட சக்தி நுழைவதாக இருந்தாலும் அது நம் வீட்டின் நிலை வாசலின் வழியாகத்தான் வீட்டிற்குள் வர வேண்டும். அதனால் அந்த நிலை வாசலை எப்போதும் நாம் மங்களகரமாக வைத்துக் கொண்டால் அது மகாலட்சுமி கடாட்சமாக இருக்கும். நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி வராமல் இருக்க வேண்டும் என்றால் நாம் சில பாதுகாப்பு விஷயங்களையும் நாம் செய்ய வேண்டும். அப்படிபட்ட சில வழிகளை தான் இந்த செய்தி தொகுப்பில் நாம் காண போகிறோம்.

-விளம்பரம்-

நிலைவாசலில் கட்டவேண்டிய பொருட்கள்

நம் வீட்டின் நிலைவாசல் படி மற்றும் நிலை வாசல் கதவை எப்போதும் சுத்தமாக துடைத்து அதில் மஞ்சள் தடவி குங்குமப்பொட்டு வைத்து நிலை வாசலில் மாக்கோலம் போட்டுருந்தால் தெய்வங்ள் போன்ற நல்ல சக்தி தானாக நம் வீட்டிற்குள் வரும். இதை தவிர நமக்கு தீங்கு விளைவிக்கும் தவிர கண் திருஷ்டி, கெட்ட சக்தி நுழையாமல் இருக்க படிகார கல், வெள்ளெருக்கன் கட்டை போன்ற பொருட்களை வாங்கி வீட்டின் நிலை வாசலில் கட்டி வைக்கலாம். இன்னும் சில பொருட்களும் இருக்கின்றது அதில் உங்களுக்கு எது சௌகரியமாக இருக்கிறதோ அந்த பொருள்களையும் நிலை வாசல் படியில் கட்டி வைக்கலாம். இது வீட்டிற்கு மங்களகத்தை கூட்டும் சின்ன விஷயங்கள்.

- Advertisement -

தண்ணீரில் இதை கலந்து தெளியுங்கள்

அதன் பின்பு தினமும் காலையில் கட்டாயமாக வீட்டில் இருக்கும் பெண்கள் நிலை வாசலைக் கூட்டி சுத்தம் செய்து தண்ணீர் தெளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இனிமேல் இப்படி தண்ணீர் தெளிக்கும் போது அந்த தண்ணீரில் சுக்குப்பொடி அல்லது இஞ்சி சாறு ஏதாவது ஒன்று கலந்து கொள்ளலாம். சுக்கு சேர்ப்பதாக இருந்தால் கடைகளில் கிடைக்கும் சுக்கு பொடியை வாங்கி ஒரு வாளி தண்ணீரில், 1 ஸ்பூன் அளவு சுக்கு பொடியை சேரத்து கலந்து வாசல் தெளிக்கவும் அதன் பின் வழக்கம் போல் கோலம் போடவும். அப்படி இல்லை என்றால் இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பின் நன்றாக நசுக்கி, வாசல் தெளிக்க வைத்திருக்கும் ஒரு வாளி தண்ணீரில் சேர்த்து, இஞ்சி சாறு தண்ணீரில் முழுவதும் இறங்கியதும், இஞ்சி சாறு வாசம் நிறைந்த தண்ணீரில் வாசல் தெளித்து பின் கோலம் போடுங்கள். இஞ்சிக்கும் சுக்குக்கும் எதிர்மறை ஆற்றலை தடுத்து நிறுத்தக்கூடிய சக்தி உள்ளது அது மட்டுமில்லாமல் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளை கூட அழிக்கும் சக்தி இந்த இரண்டு பொருளுக்கு உண்டு.

அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பவர்கள்

தினசரி இந்த பரிகாரத்தை செய்து வருபவர்களுக்கு வீட்டிற்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இது ஒரு பக்கம் இருக்க அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் வீடு கூட்டு தண்ணீர் தெளிக்க முடியாது. இது போன்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் ஒரு சிறிய கப்பில் தண்ணீர் எடுத்துக் கொண்டு, அந்த தண்ணீரில் சிறிதளவு சுக்கு பொடி அல்லது நசுக்கிய இஞ்சி துண்டுகளை கலந்து அந்த தண்ணீரை நிலைவாசல் படி, நிலை வாசலுக்கு வெளியே இருக்கும் இடத்தில் எல்லாம் இந்த தண்ணீர் படும்படி நன்றாக தெளித்து பின் துடைத்து விடுங்கள். காலையில் எழுந்ததுமே வீட்டு பெண்கள் முதல் வேலையாக இதை செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய வீட்டிற்குள் கண் திருஷ்டியோ, கெட்ட சக்தியோ, அல்லது பில்லி சூனியம் ஏவல் போன்ற பாதிப்புகளோ நெருங்கவே முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here