ருசியான நேந்திரம் பழம் பொரி இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!

- Advertisement -

காய்கறிகளை விரும்பி உண்ணாதவர் கூட பழ வகைகளை விரும்பி சாப்பிடுவதுண்டு. ஏனென்றால் பழங்கள் இனிப்புச் சுவையில் இருப்பதால் அனைவரும் விருப்பமாக சாப்பிடுகின்றனர். எனவே அனைவரது வீட்டிலும் நிச்சயம் ஏதேனும் ஒரு பழம் இருந்து கொண்டே இருக்கும். அதிலும் பலரது வீட்டிலும் வாழைப்பழங்கள் அதிகமாகவே இருக்கும். வாழைப் பழங்களை வாங்கி வைத்து சில நாட்களில் அவை வீணாகும் தருவாயில் வந்துவிடும். சில நேரங்களில் வாழைப்பழங்கள் வீட்டில் அதிகமாக இருந்தால் அவற்றை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான உணவு வகையை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

-விளம்பரம்-

நேந்திரம் வாழைப்பழம் இருந்தால் நாவில் கரையும் அற்புதமான இந்த பழம் பொரிவிரைவாக செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பழம் பொரி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பழம் பொரி செய்வதற்கு மற்ற வாழை பழங்களை விட நேந்திரம் பழம் தான் சரியாக இருக்கும். எனவே நேந்திரம் பழத்தில், அற்புதமான சுவையில், மணத்தில் செய்யக் கூடிய இந்த பழம் பொரி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -
Print
4 from 1 vote

நேந்திரம் பழம் பொரி | Nenthiram Pazham Pori In Tamil

நேந்திரம் வாழைப்பழம் இருந்தால் நாவில் கரையும் அற்புதமான இந்த பழம் பொரி விரைவாக செய்து விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தஇந்த பழம் பொரி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பழம் பொரி செய்வதற்கு மற்ற வாழை பழங்களை விட நேந்திரம் பழம் தான் சரியாக இருக்கும். எனவே நேந்திரம் பழத்தில், அற்புதமான சுவையில், மணத்தில் செய்யக் கூடிய இந்த பழம் பொரி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Nenthram Pazham Pori
Yield: 4
Calories: 238kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 நேந்திரம் பழம்
  • 1/2 கப் மைதா
  • 3 மேஜைக்கரண்டி சர்க்கரை
  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள்
  • 1 சிட்டிகை ஃபுட் கலர்
  • நீர் தேவையான அளவு.
  • எண்ணெய் பொரிக்க

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் சிறிது நீர் சேர்க்கவும் சர்க்கரை கரையும் வரை நன்கு கலக்கவும்.
  • பின்பு சிறிது மைதா மாவு சேர்க்கவும் பின்பு அதனை கெட்டியான கலவையாக கலக்கவும். சிறிது பேக்கிங் சோடா சேர்க்கவும். பின்பு பின்பு ஃபுட் கலர் சேர்க்கவும்பின்பு அதனுடன் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
  • நன்கு கலக்கவும் பின்பு வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளவும். அதனை தோலுரித்து வட்ட வடிவமாக நறுக்கிக் கொள்ளவும்
  • பின்பு அவற்றை மாவில் முக்கி எடுக்கவும்.அனைத்து பக்கங்களிலும் மாவு படும்படி முக்கி எடுக்கவும்.
  • பின்பு அதனை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.பொன்னிறமாக பொரிக்கவும். நேந்திரம் பழம்பொரி ரெடி.

Nutrition

Serving: 400g | Calories: 238kcal | Carbohydrates: 72g | Protein: 13g | Fat: 8g | Saturated Fat: 1.6g | Potassium: 1.6mg | Fiber: 4g

இதையும் படியுங்கள் : மொறு மொறுன்னு சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ஒருவாட்டி இப்படி செஞ்சு பாருங்க! இது வேற லெவல் டேஸ்ல இருக்கும்!!!