‘பிரதமன்’ என்றால் பாயாசம் என்று அர்த்தம் ஆகும். பல வகையான பொருட்களைக் கொண்டு பல வகைகளில் தயாரிக்கப்படும், இந்த பிரதமன் ரொம்பவே சுவை தரும் ஒரு ரெசிபி வகையாகும். இந்த பதிவில் நேந்திரன் பழம் வைத்து சுவையான பிரதமன் என்பதை தான் பார்க்க இருக்கிறோம். குறிப்பாக அடை பிரதமன் ரொம்பவும் பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. அதே போல செய்யப்படும் இந்த நேந்திரன் பழ பிரதமன் மிகுந்த சுவையுடன் இருக்கும்.
ஒல்லியானவர்கள் நேந்திரம் பழத்தை அவித்து சாப்பிடுவதனால் உடல் எடை நன்கு அதிகரிக்கும். நரம்புத் தளர்ச்சியைக் குணப்படுத்தும். நாம் நேந்திரம் பழத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். நேந்திரம் பழத்தை தினசரி உண்டு வருவதனால் சருமத்தைப் பாதுகாப்பதுடன்,சருமத்தைப் பளபளப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். நேந்திரன் பழ பிரதமன் நல்ல ஒரு சுவையைக் கொடுக்கும். இதை விசேஷ நாட்களில் நைவேத்தியம் படைக்க பயன்படுத்தலாம். உங்களுடைய முக்கியமான தினங்களில் செய்து கொடுத்து பாராட்டுகளை வாங்கலாம். நாவிற்கு இனிய இந்த நேந்திரன் பழ பிரதமன் செய்து எப்படி என்பதை இனி பார்ப்போம்.
நேந்திரன் பழ பிரதமன் | Nenthra Pazha Pradaman
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 நேந்திரன் பழம்
- வெல்லம் தேவையானஅளவு
- 1/2 முதல் பால் தேங்காய்ப் பால்:
- 1/2 இரண்டாம் பால் தேங்காய்ப் பால்:
- 2 ஏலக்காய் பொடித்தது
- 1 தேக்கரண்டி நெய்
செய்முறை
- தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
- நேந்திரன் பழத்தை பெரிய துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைக்கவும். வேக வைத்த பழத்தின் தோலை நீக்கி விட்டு மிக்ஸியில் போட்டுக் கூழாக அடித்துக் கொள்ளவும்.கட்டியில்லாமல் மசித்து கொள்ளவும்.
- அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்துடன் சிறிது நீர் சேர்த்து கரைத்து அடுப்பில் வைக்கவும்.வெல்ல கரைசலுடன் மசித்த பழக்கூழை சேர்த்து 2 நிமிடங்கள் கிளறவும்.
- அதனுடன் இரண்டாம் தேங்காய்ப்பாலை சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் பொடித்த ஏலக்காய் மற்றும் முதல் தேங்காய்ப்பால் சேர்த்து சூடானதும் இறக்கி விடவும்.
- சுவையான நேந்திரன் பழ பிரதமன் தயார்.நெய்யில் வறுத்த நட்ஸ் தூவி பரிமாறவும்.
Nutrition
இதையும் படியுங்கள் : சுவையான கேரட் பாயாசம் நாக்கில் எச்சில் ஊறக்கூடிய அளவிற்கு மிக அருமையாக இருக்கும்!