- Advertisement -
நீங்க அசைவ பிரியரா அப்போ உங்களுக்கான ரெசிபி தான் இது. கருவாடு என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதுவும் நெத்திலி கருவாடு மிகவும் சுவையாகவும் இருக்கும். நெத்திலி கருவாடு ப்ரை இதுபோன்று செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், அதுவும் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் நெத்திலி கருவாட்டு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!
- Advertisement -
இருக்கும். இந்த நெத்திலி கருவாடு ப்ரை சுலபமாகவும், சுவையாகவும் குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
நெத்திலி கருவாடு ப்ரை | Dry Fish Fry Recipe In Tamil
நீங்க அசைவ பிரியரா அப்போ உங்களுக்கான ரெசிபி தான் இது. கருவாடு என்றாலே அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அதுவும் நெத்திலி கருவாடு மிகவும் சுவையாகவும் இருக்கும்.நெத்திலி கருவாடு ப்ரை இதுபோன்று செய்து சாம்பார் சாதம், ரசம் சாதம், அதுவும் பழைய சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.இந்த நெத்திலி கருவாடு ப்ரை சுலபமாகவும், சுவையாகவும் குறைந்த நேரத்தில் சமைத்து விடலாம். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- 350 கிராம் நெத்திலி கருவாடு
- எண்ணெய் தேவையான அளவு
- கருவேப்பிலை கொஞ்சம்
- 10 பல் பூண்டு தட்டியது
- 20 சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது
- ¾ கப் பெரிய வெங்காயம் நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1¼ டீஸ்பூன் மிளகாய் தூள்
- 1 டீஸ்பூன் குழம்பு பொடி
- 1 தக்காளி நறுக்கியது
- புளி கொஞ்சம் [தேவைப்பட்டால்]
செய்முறை
செய்முறை:
- முதலில் கருவாட்டை சுடுதண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவேண்டும் பிறகு அதன் தலை பகுதி மற்றும் வயிற்று பகுதி நீக்கிவிட்டு பச்சை தண்ணீரில் மூன்று முறை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
- பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் தட்டிய பூண்டு சேர்த்து வதக்கவும், பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டையும் சேர்த்து வதக்கவும். சிறிதளவு உப்பு சேர்த்திக்கொள்ளவும்.
- வெங்காயம் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு பொடி, சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போக வதக்கவும்.
- எண்ணெய் பிரிஞ்சி வந்தவுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு கொழைய வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாடு சேர்த்து மிதமான தீயில் மசாலாவிலே வேகவிடவும். சிறிதளவு தேவைப்பட்டால் புளி தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம், இல்லையெனில் தண்ணீர் தெளித்து வேகவைக்கலாம். மூடி போட்டு 10 நிமிடம் வேகவைக்கவும்.
- கருவாடு வெந்தவுடன் அதன் மேல் கருவேப்பிலை தூவி விட்டு அடுப்பை நிறுத்தவும்.
- இப்பொழுது சுவையான நெத்திலி மீன் கருவாடு ப்ரை தயார்.