அசைவ உணவை பிரசாதமாக தரும் இந்தியாவில் உள்ள 8 கோவில்கள் பற்றி தெரியுமா ?

- Advertisement -

நாம் வாழும் இந்தியாவில் கோவில்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு ஊரிலும் ஏன் ஒவ்வொரு தெருவிலும் கூட ஒரு கோயில் உள்ளது. நம் இந்தியாவில் ஏனோ கோவில்களில் எந்த மாறுபாடுகளும் இல்லை, ஆனால் நாம் கும்பிடும் கலாச்சாரத்திலும் பழக்கவழக்கங்களிலும் நிறைய மாறுபாடுகள் உள்ளன.

-விளம்பரம்-

கோவில் பிரசாதம் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது பொங்கலும், புளியோதனையும் தான். புளியோதரை என்றாலே அதுவும் கோயில் புளியோதரை என்றால் நாமளும் வரிசையில் முந்திஅடித்துக் கொண்டு நின்று இருப்போம். இதனை தவிர்த்து வடை, பஞ்சாமிர்தம், சுண்டல் இவைதான் நம் நினைவிற்கு வரும். ஆனால் இந்தியாவில் அசைவத்தைக் கூட பிரசாதமாக தரும் சில கோவில்கள் உள்ளன. அவற்றைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

- Advertisement -

மதுரை முனியாண்டி கோவில் :

இந்த வரிசையில் நாம் முதலாவதாக பார்க்க உள்ளது மதுரையில் உள்ளது வடக்கம்பட்டி என்னும் கிராமத்தில் முனியாண்டி கோவில் உள்ளது. சிவனின் அவதாரமாக விளங்கும் முனீஸ்வரனின் மற்றொரு பெயர் தான் முனியாண்டி. இந்த கோவிலில் வழக்கத்துக்கு மாறாக ஆண்டில் மூன்று நாட்கள் ஆண்டு விழா நடத்தப்படுகிறது. இவ்விழா நடத்தும் வேளையில் பக்தர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி பிரசாதமாக வழங்கப்படுகிறது.

ஒரிசா ஜெகன்நாதர் கோவில் :

-விளம்பரம்-

ஒரிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகன்நாதர் கோயில் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இக்கோயில் வளாகத்தில் உள்ள விமலா கோயில் அங்கு விளங்கும் சக்தி பீடங்களில் ஒன்று. இக்கோவிலில் துர்கா தேவி திருவிழா அன்று மார்க்கண்டேய கோவில் தொட்டியில் இருந்து மீன் சமைத்து விமலா தேவிக்கு படையல் ஆக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இத்திருவிழா நாட்களில் விடிவதற்கு முன்னரே பலியிடப்படும் ஆடுகளை சமைத்து ‘பிமலா பருசா’என்ற பெயரில் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

உத்தரபிரதேச தர்குல்ஹா தேவி கோவில் :

உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ள தர்குல்ஹா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் கிச்சாரி மேளா நடத்தப்படும். இத்திருவிழா மிகவும் விமர்சியாக நடத்தப்படும். இத்திருவிழாவின் போது நாடு முழுவதும் உள்ள மக்கள் சைத்ரா நவராத்திரியில் இந்த கோவிலுக்கு வந்து தங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக ஒரு ஆட்டை அம்மனுக்கு காணிக்கையாக செலுத்துகிறார்கள். இந்த இறைச்சி பின்னர் சமையற்காரர்களால் மண் பாத்திரங்களில் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

-விளம்பரம்-

கேரளா பராசினிக்கடவு கோயில் :

கலியுகத்தில் பிறந்த விஷ்ணு மற்றும் சிவனின் அவதாரமாக அறியப்படும் முத்தப்பனுக்காக கட்டப்பட்ட பராசினிக் கடவு கோயில் கேரளாவில் அமைந்துள்ளது. இக்கோவிலிலுள்ள முத்தப்பன் கடவுளுக்கு கள்ளுடன் சுடப்பட்ட மீன்களை படயலாக படைக்கின்றனர். பின்னர் அதனையே கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.

மேற்கு வங்காள கைல்காட் கோவில் :

இந்தியாவில் உள்ள 51 சக்திபீடங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான வங்காளத்தில் இருக்கும் கைல்காட் கோவில் 200 ஆண்டுகள் பழமையானது. இங்கு காளி தேவியை மகிழ்விப்பதற்காக பெரும்பாலான பக்தர்கள் ஆடுகளை பலியிடுகின்றனர். பின் அவற்றை சமைத்து அதுவே பின்னர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அசாம் காமாக்யா கோவில் :

அசாமின் நிலாச்சல் மலைப்பகுதியில் அமைந்துள்ளது காமாக்யா கோவில். இக்கோவிலை இந்தியாவில் தெரியாதவர் யாரும் இல்லை. இக்கோவில் இந்தியாவின் பிரபலமான சக்தி பீடங்களில் ஒன்றாகும். இக்கோவிலில் சக்தி தாயாருக்கு இரண்டு வகையான இறைச்சி படையலாக படைக்கப்படுகிறது. அவை வெங்காயம் மற்றும் பூண்டு பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன. சில சமயங்களில் மீன்களை சட்னி வடிவில் செய்து மதியம் 1 மணி முதல் 2 மணி வரை அம்மனுக்கு சமர்பிப்பார்கள்.

மேற்கு வங்காள தாராபித் கோவில் :

வங்காளத்தில் இருக்கும் ​​துர்கா பக்தர்களிடையே அறியப்படும் தாராபித் கோயில் என்ற பெயரில் பிர்பும் நகரில் மற்றொரு கோயில் உள்ளது. மக்கள் பலியிடும் இறைச்சி தெய்வத்திற்கு மதுவுடன் படைக்கின்றனர். இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேற்கு வங்காள தட்சிணேஸ்வர் காளி கோவில் :

மேற்கு வங்காளத்தில் உள்ள தட்சிணேஸ்வர் காளி கோவில், துர்கா தேவியின் பக்தர்களிடையே மிகவும் பிரபலமான மற்றொரு சக்திபீடமாகும். இந்த கோவிலில், காளி தேவியை வழிபட வரும் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் போகத்தில் அம்மனுக்கு மீன் பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஆனால், இந்த கோவிலில் மிருக பலி கொடுப்பதில்லை.