தித்திக்கும் சுவையில் நுங்கு பாயசம் இப்படி செய்து பாருங்க! யாரும் வேண்டானு சொல்ல மாட்டாங்க!

nungu payasam
- Advertisement -

நுங்கு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று நுங்கு. ஆனால் அது வெயில் காலங்களில் தான் கிடைக்கும். இருந்தாலும் பாரவைளை நம் நுங்கை வைத்து பாயசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு மாலையில் என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த பாயசம் செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -
nungu payasam
Print
No ratings yet

நுங்கு பாயசம் | Nungu Payasam Recipe In Tamil

நுங்கு என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிட கூடிய ஒன்று நுங்கு. ஆனால் அது வெயில் காலங்களில் தான் கிடைக்கும். இருந்தாலும் பாரவைளை நம் நுங்கை வைத்து பாயசம் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். குழந்தைகளுக்கு மாலையில் என்ன ஸ்வீட் செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த பாயசம் செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time10 minutes
Active Time11 minutes
Total Time20 minutes
Course: evening, sweets
Cuisine: Indian, TAMIL
Keyword: nungu payasam, நுங்கு பாயசம்
Yield: 4 people

Equipment

  • கடாய்

தேவையான பொருட்கள்

  • 6 நுங்கு
  • 350 லிட்டர் பால்
  • சர்க்கரை தேவையான அளவு
  • 2 ஸ்பூன் பாதம் பவுடர்
  • 20 பாதம் நுணுகியது

செய்முறை

  • முதலில் நுங்கை தோலுரித்து அதனை மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் பால் ஊற்றி பொங்கியதும் அரைத்து வைத்துள்ள நுங்கை பாலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிண்டி விடவும்.
  • பிறகு அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கரையும் வரை கிண்டி விடவும்.
  • அடுத்து ஒரு சின்ன பௌலில் பாதம் பௌடர் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு கலக்கவும். ஜெல் பதம் வந்ததும் பாலில் ஊற்றவும்.
  • பால் கொஞ்சம் கெட்டியானதும் நுணுகிய பாதம் சேர்த்து கலந்து அடுப்பை நிறுத்தவும்.

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்டைலில் ருசியான சாகோ பாயசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!