Home சைவம் உடலுக்கு வலு சேர்க்கும் ஓட்ஸ் வெங்காய தோசை அருமையான சுவையில் செய்து இப்படி பாருங்கள்!!!

உடலுக்கு வலு சேர்க்கும் ஓட்ஸ் வெங்காய தோசை அருமையான சுவையில் செய்து இப்படி பாருங்கள்!!!

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் வயதானவர்களும் சர்க்கரையின் நோயாளிகளும் அதிகமாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது பலருக்கு பிடிக்கவே பிடிக்காது அதனால் அதற்கு பதிலாக ஓட்ஸ் வைத்து வேறு ஏதாவது செய்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் பல.

-விளம்பரம்-

அவர்களுக்காகவே இன்று நாம் ஓட்ஸ் வைத்து செய்யக்கூடிய ஓட்ஸ் வெங்காய தோசை பார்க்கப் போகிறோம். வீட்டில் சில நேரம் தோசை மாவு இல்லாத சமயத்தில் இன்ஸ்டன்டாக செய்யக்கூடிய இந்த ஓட்ஸ் வெங்காய தோசை முயற்சி செய்து பார்க்கலாம் சுவையும் அட்டகாசமாக இருக்கும் அதே நேரத்தில் மிகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

குழந்தைகளுக்கும் கூட இந்த ஓட்ஸ் வெங்காய தோசை நாம் கொடுக்கலாம். இதில் அவ்வளவு சத்துக்கள் உள்ளது. ஓட்ஸில் பலவகையான ஃபிளேவர்ஸ் உண்டு. அதில் நாம் எந்த பிளேவர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் அனைத்துமே மிகவும் சூப்பராக இருக்கும். மிகவும் சுலபமாகவும் குறைந்த நேரத்திலேயே நாம் இந்த ஸ்போர்ட்ஸ் வெங்காய தோசை செய்து முடித்து விடலாம். இப்ப வாங்க இந்த அருமையான ஓட்ஸ் வெங்காய தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

ஓட்ஸ் வெங்காய தோசை | Oats Onion Dosai Recipe In Tamil

உடல்எடையை குறைக்க நினைப்பவர்களும் வயதானவர்களும் சர்க்கரையின் நோயாளிகளும் அதிகமாக ஓட்ஸ் எடுத்துக் கொண்டால் மிகவும் நல்லது. ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஓட்ஸ் கஞ்சி சாப்பிடுவது பலருக்கு பிடிக்கவே பிடிக்காது அதனால் அதற்கு பதிலாக ஓட்ஸ் வைத்து வேறு ஏதாவது செய்து சாப்பிட்டால் நல்லா இருக்கும் என்று நினைப்பவர்கள் பல.. மிகவும் சுலபமாகவும் குறைந்த நேரத்திலேயே நாம் இந்த ஸ்போர்ட்ஸ் வெங்காய தோசை செய்து முடித்து விடலாம். இப்ப வாங்க இந்த அருமையான ஓட்ஸ் வெங்காய தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Oats Onion Dosai
Yield: 4
Calories: 131kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 கப் ஓட்ஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் தயிர்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 3 பச்சை மிளகாய்
  • 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1 வெங்காயம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு கடாயில் ஓட்டை போட்டு நன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸிஜாரில் போட்டு அரைத்து பொடி ஆக்கிக் கொள்ளவும்.பச்சை மிளகாயையும் சீரகத்தையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் பொடியாக்கி வைத்துள்ள ஓட்ஸ் தயிர் அரிசி மாவு சோள மாவு பச்சை மிளகாய் விழுது அனைத்தையும் சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
     
  • 30 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும். அரை மணி நேரத்திற்கு பிறகு வெங்காயத்தையும், கருவேப்பிலையும் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசை கல்லில் உங்களுக்கு தேவையான வடிவத்திற்கு மெல்லியதாக தோசை போல் ஊற்றி தேவைப்பட்டால் எண்ணெய் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான ஓட்ஸ் வெங்காய தோசை தயார்.
  • இதனை உங்களுக்கு பிடித்தமான சட்னி சாம்பார் கிரேவிகளுடன் வைத்து பரிமாறினால் சுவை அட்டகாசமாக இருக்கும் அதே நேரத்தில் ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

Nutrition

Serving: 2nos | Calories: 131kcal | Carbohydrates: 27g | Protein: 5.4g | Vitamin A: 49.2IU | Calcium: 25mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : ஆரோக்கியமான சிறுதானிய அடை ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்! வீட்டில் இருப்பவர்கள் வேணாம்னு சொல்லாம சாப்பிடுவாங்க!