Home ஐஸ் கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க ஆரஞ்சு குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

கோடை வெயில் தரும் வாட்டத்தை குறைக்க ஆரஞ்சு குல்பி ஐஸ் இப்படி செய்து பாருங்க!

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பிகாரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். சுவையான குல்பி, பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

-விளம்பரம்-

இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான குல்பியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். இதனை அதிகபட்சமாக 30 முதல் 40 நிமிடங்களுக்குள்ளாகவே செய்யலாம் இரவில் செய்து ஃப்ரிட்ஜில் வைத்தால் காலையில் சுவையான குல்பி தயாராகிவிடும்.

குழந்தைகளுக்கு ஆரஞ்சு என்றால் மிகவும் பிடிக்கும். அத்தகைய குழந்தைகளுக்கு ஆரஞ்சைக் கொண்டு ஒரு வித்தியாசமான ஒரு ரெசிபி செய்து கொடுக்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியெனில் அருமையான முறையில் ஒரு குல்பி செய்து கொடுக்கலாமே!வெயிலில் இருந்து தப்பிக்க ஜூஸ், தயிர், மோர் வகைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். கோடை காலம் ஆரம்பித்து விட்டால் ஜில்லென ஏதாவது சாப்பிட விரும்புவோம். அந்த வகையில் கோடை காலத்துக்கு இதமா ஆரஞ்சு குல்பி செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இந்த ஆரஞ்சு குல்பி செய்வது மிகவும் சுலபம். கோடைக்காலத்தில் கடைகளில் விற்கப்படும் ஐஸ்கிரீம்களை வாங்கி கொடுப்பதற்கு பதிலாக, வீட்டிலேயே குல்பியை செய்து கொடுத்து மகிழுங்கள்.

Print
No ratings yet

ஆரஞ்சு குல்பி | Orange Kulfi Recipe In Tamil

குல்பி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு சுவையான உணவு வகை. வெயில் காலங்களில் வீட்டு வாசலில் மணி அடித்துக் கொண்டு வரும் குல்பிகாரரிடம் குல்பி வாங்கி சாப்பிடுவது, நம் குழந்தை பருவத்தில் யாராலும் மறக்கவே முடியாத இனிமையான நினைவுகள். சுவையான குல்பி, பால், சர்க்கரை, பாதாம், பிஸ்தா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். இதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்யலாம். கடைகளில் வாங்குவதை காட்டிலும் சுவையாகவும் அதே சமயத்தில் ஆரோக்கியமாகவும் இருக்கும். சுவையான குல்பியை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: Dessert
Cuisine: Indian
Keyword: Orange Kulfi
Yield: 3 People
Calories: 73kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 பால் பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 1/2 லி பால்
  • 2 டேபிள் ஸ்பூன் பால் பவுடர்
  • 2 டேபிள் ஸ்பூன் கண்டென்ஸ்ட்டு மில்க்
  • 1/4 கப் ஃப்ரெஷ் க்ரீம்
  • 1/4 கப் நறுக்கி பாதாம், பிஸ்தா
  • 1/2 டீஸ்பூன் குங்குமப் பூ
  • 1/2 கப் ஆரஞ்சு பழச்சாறு
  • 2 ஆரஞ்சு

செய்முறை

  • முதலில் ஒரு பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாலை ஊற்றி நன்கு காய்ச்சவும். பின் பால் சுண்டி சிறிது கெட்டியாக வரும் சமயத்தில் பால் பவுடரை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • பின் அடுப்பை குறைந்த தீயில் வைத்து பாலுடன் கண்டென்ஸ்ட்டு மில்க் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
  • பின் பால் சற்று கெட்டியாகி வரும் போது ஃப்ரெஷ் க்ரீம், பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்து பால் கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும்.
  • அதன்பிறகு பால் நன்கு ஆறியதும் இதில் ஆரஞ்சு பழ சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் ஆரஞ்சு பழத்தின் மேல் பகுதியை மட்டும் நீக்கி விட்டு அதன் உள்ளே உள்ள அனைத்தையும் நீக்கி அதன் கூடை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • பின் பாலை ஆரஞ்சு பழ‌ கூட்டிற்க்குள் ஊற்றி ஆரஞ்சு பழ தோலால் அதனை மூடி ஒரு பாயில் சீட்டால் இதனை முழுவதுமாக மூடி பிரிட்ஜில் இரவு முழுவதும் வைத்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஆரஞ்சு குல்பி தயார். காலையில் இதனை வெளியே எடுத்து பரிமாறவும்.

Nutrition

Serving: 400g | Calories: 73kcal | Carbohydrates: 6.5g | Protein: 3.1g | Fat: 2g | Sodium: 6mg | Potassium: 237mg | Sugar: 2.5g | Vitamin A: 14IU | Vitamin C: 69.7mg | Calcium: 52mg | Iron: 15mg

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு ஏற்ற சூப்பரான ஒரு ஆப்பிள் ஐஸ்கிரீம் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!