வாரம் ஒரு முறை வீடே மணக்க மணக்கு ருசியான பலாபிஞ்சு சாம்பார் இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

பல  நிகழ்ச்சிகள்ல அசைவ உணவுகளுக்கு பதிலாக சைவ உணவுகளை அசைவ சுவையில் செய்து குடுத்துட்டு இருக்காங்க. அப்படி மட்டனுக்கு பதிலா  பயன்படுத்தப்படுகிற ஒரு காய்தான் பலாக்காய் பிஞ்சு. அப்படி அந்த பலாக்காய் பிஞ்சு எவ்வளவு சுவையாக ருசியாவும் அப்படியே மட்டன் சுவையில் இருக்கு. சைவ மட்டன் என்று அழைக்கப்படும் இந்த பலாக்காய் பிஞ்சு.

-விளம்பரம்-

இந்த பலாக்காய் மசாலா ரொம்பவே சுவையா எப்படி செய்வது என்று பார்க்க இருக்கோம். அசைவ சுவைல இந்த பலாக்காய் மசாலா எப்படி செய்வது பார்க்கலாம். இதுவரைக்கும் பலாக்காய் பிஞ்சில எந்த ஒரு உணவும் செய்யாதவங்க இப்போ புதுசா ட்ரை பண்ணி பாருங்க. இது ரொம்பவே சுவையா அப்படியே மட்டன் சுவையில் கிடைக்கும்.

- Advertisement -

இது சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு.  அப்படி கிடைக்கலைனு கவலைப்படவே வேண்டாம் கிராமப்புறங்களையும் சரி நகர்புறங்களையும் சரி எல்லா காய்கறி கடைகளையும் இப்போ பலா காய்.பிஞ்சுகள் கிடைக்க ஆரம்பிக்குது. தோலை செத்திட்டு அழகா சின்ன சின்ன சின்னதா கட் பண்ணி வேகவைத்து சமைத்தால் ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் சாம்பார் எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

பலாபிஞ்சு சாம்பார் | Palaapinju Sambar Recipe In tamil

சைவ உணவுகள் சாப்பிடறவங்களா இருந்தீங்கன்னா நீங்க இந்த பலாக்காய சமைத்து சாப்பிடும்போது உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். இப்ப கடைகளில் நிறையவே கிடைக்கிறது இந்த பலாக்காய் பிஞ்சு.  அப்படிகிடைக்கலைனு கவலைப்படவே வேண்டாம் கிராமப்புறங்களையும் சரி நகர்புறங்களையும் சரி எல்லா காய்கறி கடைகளையும் இப்போ பலா காய்.பிஞ்சுகள் கிடைக்க ஆரம்பிக்குது. தோலை செத்திட்டு அழகா சின்ன சின்ன சின்னதா கட் பண்ணி வேகவைத்து சமைத்தால் ரொம்பவே சுவையா இருக்கும். அப்படி சுவையான ருசி இந்த மட்டன் சுவையில் பலாக்காய் சாம்பார் எப்படி செய்றது அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Palapinju Sambar
Yield: 4
Calories: 105kcal

Equipment

  • 1 குழம்பு பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 1 பலாபிஞ்சு 
  • 1 தக்காளி
  • 2 ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/4 மூடி தேங்காய்
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் பலா பிஞ்சை தோல் நீக்கி சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ள வேண்டும்.  தேங்காயைமிக்ஸியில் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும்.
  • பின் குக்கரில் பருப்பு, தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு , கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.  வெங்காயம்நன்றாக வதங்கியதும் அதில் பலா பிஞ்சு சேர்த்து மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  •  
    பலாபிஞ்சு வெந்த பிறகு தேங்காயை சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேகவைத்த பருப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • சாம்பார் கொத்தித்த உடன் இறக்கி சாதத்தோடு சூடாக பரிமாறினால் சுவையான பலாபிஞ்சு சாம்பார் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 105kcal | Carbohydrates: 12g | Protein: 4g | Calcium: 3.1mg | Iron: 0.26mg

இதையும் படியுங்கள் : பருப்பில்லாதே நேரங்களில் ரோட்டு கடை ஸ்டைல் தக்காளி சாம்பார் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!