மொறு மொறுனு ஸ்நாக்ஸ் சாப்பிட பாலக் கீரை பக்கோடா இப்படி ட்ரை பண்ணி பாருங்க! ருசியாகவும் இருக்கும் ஆரோக்கியமும் கூட!

- Advertisement -

பக்கோடா இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. பக்கோடாக்களில் பல வகை உண்டு. அதில் வெங்காய பக்கோடா, முந்திரி பக்கோடா, சிக்கன் பக்கோடா, இறால் பக்கோடா, பன்னீர் பக்கோடா, மற்றும் உருளைக்கிழங்கு பக்கோடா மிகவும் பிரபலமானவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது பாலக் கீரை பக்கோடா.

-விளம்பரம்-

தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது. இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும் பிரபலம் அடைந்திருக்கிறது. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்கு மிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது.

- Advertisement -

விருந்தினர்களின் வருகையின்போதும், குழந்தைகளின் சிணுங்கலின்போதும் இல்லத்தரசிகளின் மெனுவில் இடம்பெறுவதும் பக்கோடாதான். ஒரு சில பொருள்களை வைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும் மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும் பாலக் கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
1 from 1 vote

பாலக் கீரை பக்கோடா | Palak Pakoda Recipe In Tamil

தமிழ்நாட்டில் பக்கோடா என்று அழைக்கப்படும் இவை, ஆந்திராமற்றும் கர்நாடகாவில் பஜ்ஜி என்றும், மகாராஷ்டிராவில் பக்கோரா ன்றும் அழைக்கப்படுகிறது.இந்திய துணை கண்டத்தில் உதயமான இவை மெல்ல மெல்ல வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் நேபாளத்திலும்பிரபலம் அடைந்திருக்கிறது. மாலை நேரங்களில் காபியுடன் பக்கோடாவை சுவைப்பது பெரும்பாலானோருக்குமிகவும் விருப்பமான காம்பினேஷன் ஆக இருக்கிறது. ஒரு சில பொருள்களைவைத்துக்கொண்டே சுலபமாகத் தயாரித்துவிடக்கூடிய பக்கோடாவால் குடும்பத்தினரையும் உறவினர்களையும்மகிழ்ச்சியடைய செய்ய முடியும். உடலுக்குச் சத்தும் மனத்துக்கு உற்சாகமும் அளிக்கும்பாலக் கீரை பக்கோடா எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: palak Pakoda
Yield: 4
Calories: 25kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் பாலக் கீரை
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1/2 கப் பஜ்ஜி மாவு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் பொறிப்பதற்கு

செய்முறை

  • பாலக் கீரையை கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு பௌலில் அரிசி மாவு, மிளகாய் தூள், பஜ்ஜி மாவு, உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
  • அதில் நறுக்கிய பலக்கீரை, வெங்காயம் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
     
  • வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கலந்த மாவை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக போட்டு பொறித்தெடுக்கவும்.பொன்னிறமாக பொறித்து எடுத்து பரிமாறும் தட்டில் வைக்கவும்.
  • அவ்வளவுதான்மிகவும் சுவையான சத்தான பாலக் கீரை பக்கோடா சுவைக்கத் தயார்.
  • மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 100g | Calories: 25kcal | Carbohydrates: 5.3g | Protein: 2g | Fat: 0.1g | Potassium: 303mg | Fiber: 5.5g | Vitamin C: 46.4mg