இந்த வெயிலுக்கு ஏற்ற மாதிரி பானகம் ஒரு முறை செய்து குடித்து பாருங்கள்!

- Advertisement -

பானகம் என்றால் ஒரு சிலருக்கு என்னவென்றே தெரியாது. ஆனால் ஒரு சில ஊர்களில் இதனை பானக்கம் என்றும் சொல்வார்கள். பானக்கரம் என்றும் சொல்வார்கள். பொதுவாக இதனை வீடுகளில் செய்வதை விட ஊர் திருவிழாக்களில் பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து அனைவருக்கும் கொடுப்பார்கள் குடிப்பதற்கு அவ்வளவு இதமாக இருக்கும். அதிலும் இந்த வெயில் காலத்தில் இந்த பான கரத்தை குடிக்கும் பொழுது ஒரு புத்துணர்ச்சி வரும் என்றே சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த காலத்தில் எல்லாம் ரோஸ் மில்க் பாதாம் மில்க் இதெல்லாம் விட இந்த பானக்கரம் தான் மிகவும் பேமஸ். இதைக் குடிக்கத்தான் கூட்டம் அலைமோதும். ஆனால் இப்பொழுது கூட ஒரு சில திருவிழாக்களில் மட்டும் தான் இந்த பானக்கரம் கொடுக்கிறார்கள். இப்ப இருக்க குழந்தைங்க எல்லாம் இந்த பானைக்காரன் கொடுத்திருக்க வாய்ப்பே கிடையாது. ஆனா நீங்க வீட்லயே இந்த பானகரத்தை ஈஸியா செஞ்சி உங்க குழந்தைகளுக்கு குடுங்க ரொம்ப விரும்பி கண்டிப்பா குடிப்பாங்க.

- Advertisement -

இந்த வெயில் காலத்துல மதிய நேரத்தில் குழந்தைகளுக்கு கொடுங்க. குழந்தைகளுக்கு மட்டுமல்லவா உங்க வீட்ல இருக்குற பெரியவங்களுக்கு குடுங்க அவங்க இன்னுமே ரொம்ப விரும்பி குடிப்பாங்க ஏன்னா அவங்க எல்லாரும் அந்த காலத்துல புத்துணர்ச்சிக்காக இந்த பானகரத்தை தான் குடிச்சுருப்பாங்க. இந்த பானகரம் செய்வது ரொம்பவே ஈஸி நாலே பொருள் வைத்து நச்சுனு இந்த சூப்பரான பானக்கரம் செஞ்சிடலாம். இப்ப வாங்க இந்த சுவையான பானகரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

பானகம் | Panagam Recipe In Tamil

பானகம் என்றால் ஒரு சிலருக்கு என்னவென்றே தெரியாது. ஆனால் ஒரு சில ஊர்களில் இதனை பானக்கம் என்றும் சொல்வார்கள். பானக்கரம் என்றும் சொல்வார்கள். பொதுவாக இதனை வீடுகளில் செய்வதை விட ஊர் திருவிழாக்களில் பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து அனைவருக்கும் கொடுப்பார்கள் குடிப்பதற்கு அவ்வளவு இதமாக இருக்கும். இந்த பானகரம் செய்வது ரொம்பவே ஈஸி நாலே பொருள் வைத்து நச்சுனு இந்த சூப்பரான பானக்கரம் செஞ்சிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Drinks
Cuisine: tamil nadu
Keyword: Panagam
Yield: 4
Calories: 187kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 150 கிராம் புளி
  • 200 கிராம் வெல்லம்
  • 1/4 டீஸ்பூன் சுக்கு பொடி
  • 1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

செய்முறை

  • வெல்லத்தை நன்கு தட்டி பொடியாக்கிக் கொள்ளவும்
  • புளியை சுடு தண்ணீரில் ஊற வைத்து நன்குகரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
  • பின்பு வடிகட்டிய புளி தண்ணீருடன் வெல்லத்தை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் சுக்கு பொடி கலந்து குடித்தால் சுவையான பானகம் தயார்
  • வெயில் காலத்தில் இதனை குடித்தால் மிகவும் இதமாக புத்துணர்ச்சியாக இருக்கும்

Nutrition

Serving: 100g | Calories: 187kcal | Carbohydrates: 31.9g | Protein: 1.3g | Sodium: 21mg | Potassium: 474mg | Fiber: 2.3g | Calcium: 0.5mg

இதையும் படியுங்கள் : குளு குளுனு சுவையான வெள்ளரிப்பழ ஜூஸ் இப்படி சுலபமாம வீட்டிலயே செய்து பாருங்கள்!