தமிழ் உணவு கலாச்சாரத்தில் இனிப்பு வகைகளுக்கு என தனி இடம் உண்டு. இனிப்பு வகைகளில் ஒன்றான ஜிலேபி வட இந்தியர்களின் பிரதான இனிப்பு வகையாக உள்ளது. வட இந்தியாவில் தோன்றினாலும் இப்போது நமது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் இந்த ஜிலேபி சுவைக்கு அடிமையானவர்கள் இருக்கின்றனர். இந்த இனிப்பு வகை பொதுவாக பண்டிகைகளின் போதும் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளுக்கும் தயாரித்து மகிழ்வர்.
இதனையும் படியுங்கள் : சூப்பரான ஜெர்மன் ஆப்பிள் கேக் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
இது மிகவும் மொறுமொறுப்பாக மென்மையாக இருப்பதோடு வாயில் போட்டதும் அப்படியே ஜூஸியாக உருகக் கூடியதாகவும் உள்ளது. இந்த ஜிலேபி மொறு மொறுவென மற்றும் மென்மையாகவும் இருக்கும். கடைகளில் விற்பனைக்காக செய்யப்படுகின்ற ஜிலேபி ரெசிபியை பார்த்தால் குறைந்தது 6-8மணி நேரமாவது ஆகும். அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஜிலேபியை உடனடியாக வீட்டிலேயே செய்வது எப்படி என்பதை பார்ப்போம் வாருங்கள்.
பன்னீர் ஜிலேபி | Paneer Jalebi Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 வாணலி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 150 கிராம் பன்னீர்
- 1/2 கப் சர்க்கரை
- 1 சிட்டிகை கேசரி பவுடர்
- 4 டீஸ்பூன் மைதா
- 1/4 டீஸ்பூன் பேக்கிங்
- 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
- 2 ஏலக்காய்
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அரை கப் சர்க்கரை கால் கப் தண்ணீர் சேர்த்து பாகு தயாரித்து கொள்ளவும்.
- பாகு கெட்டியாக கம்பி பதம் வந்த பிறகு சிறிதளவு கேசரி பவுடர் அல்லது குங்குமப்பூ சேர்த்துக் கொள்ளவும். அத்துடன் ஏலக்காய் 2 சேர்த்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் பன்னீரை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அத்துடன் 4 ஸ்பூன் மைதா, பேக்கிங் சோடா, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடான பின் ஜிலேபி பிழிந்து எடுக்கவும்.
- மெதுவான தீயில் ஜிலேபி பிழியவும் அல்லது அதன் வடிவம் உடைந்துவிடும்.
- ஜிலேபி நன்கு வெந்தவுடன் பொன் நிறமாக மாறிய உடன். செய்து வைத்திருந்த சர்க்கரை பாகில் சேர்த்துக் கொள்ளவும்.
- 10 நிமிடம் ஊறவைகத்து பின்பு பறிமாறலாம். இப்போது சுவையான மிகவும் எளிய முறையில் பன்னீர் ஜிலேபி தயார்.