Home சைவம் உங்க வீட்ல பன்னீர் இருந்தா இந்த பன்னீர் மசாலா செஞ்சு பாருங்க!

உங்க வீட்ல பன்னீர் இருந்தா இந்த பன்னீர் மசாலா செஞ்சு பாருங்க!

வடநாட்டுல ரொம்ப ஃபேமஸா இருக்கக்கூடிய பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்திக்கு நம்ம வீட்ல அடிக்கடி செய்வோம். பன்னீர் 65 பன்னீர் புர்ஜி அப்படின்னு பன்னீர் வச்சு நம்ம நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம கொஞ்சம் வித்தியாசமா பண்ணீர் வச்சு இந்த பன்னீர் மசாலா செஞ்சு பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். இந்த பன்னீர் மசாலா செய்றதுக்கு பன்னீரை சின்ன சின்ன கியூப்சா கட் பண்ணி வச்சுக்கணும்.

-விளம்பரம்-

பெருசு பெருசா போட்டா அதுல மசாலா இறங்காது சின்ன சின்னதா கட் பண்ணதா மசாலா நல்லா இறங்கி சாப்பிடுவதற்கு சூப்பர் டேஸ்ட்ல இருக்கும். இதுல நம்ம போடுற மசாலா எல்லாமே பன்னீர்ல நல்லா இறங்கி வெந்த பின்னாடி அத சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடுறதுக்கோ இல்ல இட்லி தோசை கூட சாப்பிடறதுக்கோ அல்டிமேட் ஆன காம்பினேஷனா இருக்கும்.

இட்லிக்கு பன்னீர் பட்டர் மசாலா வைத்து சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை இட்லிக்கு இந்த பன்னீர் மசாலா வைத்து சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் பன்னீர் பட்டர் மசாலாவை விட இந்த பன்னீர் மசாலா தான் அதிகமா செய்வீங்க.

குழந்தைகளுக்கு எல்லாம் இந்த பன்னீரை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா மிச்சம் வைக்காம இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. இந்த பன்னீர் மசாலாவை இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு மட்டுமில்லாமல் தேங்காய் பால் சாதம் புலாவ் பிரிஞ்சி சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
4 from 1 vote

பன்னீர் மசாலா | Paneer Masala Recipe In Tamil

குழந்தைகளுக்கு எல்லாம் இந்த பன்னீரை ரொம்ப பிடிக்கும் அவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பா மிச்சம் வைக்காம இன்னும் ரெண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவாங்க. இந்த பன்னீர் மசாலாவை இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு மட்டுமில்லாமல் தேங்காய் பால் சாதம் புலாவ் பிரிஞ்சி சாதம் அப்படின்னா எல்லாத்துக்குமே வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் ரொம்ப சூப்பரா இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான பன்னீர் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: paneer masala
Yield: 4
Calories: 321kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பன்னீர்
  • 1/2 கப் தயிர்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டீஸ்பூன் வறுத்த வெங்காய விழுது
  • 1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1/2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 பட்டை
  • 2 கிராம்பு
  • 1 கல்பாசி
  • 1 பிரிஞ்சி இலை
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் பன்னீரை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்
  • அதில் பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து மிளகாய் தூள் சிக்கன் மசாலா கரம் மசாலா மல்லி தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  • நன்றாக கலந்த பிறகு மீண்டும் அதில் தயிர் இஞ்சி பூண்டு விழுது வறுத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு சீரகம் பிரியாணி இலை, கல்பாசி சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள பன்னீரை சேர்த்துக் கொள்ளவும்
  • நன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைக்கவும்
  • மிகவும் தண்ணீராகவும் இல்லாமல் மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் கிரேவி பதத்திற்கு வந்து நன்றாக பன்னீர் வெந்தவுடன் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பன்னீர் மசாலா தயார்

Nutrition

Serving: 100g | Calories: 321kcal | Carbohydrates: 2.9g | Protein: 25g | Sodium: 18mg | Potassium: 71mg | Fiber: 1.4g | Vitamin C: 12mg | Calcium: 23mg | Iron: 1mg

இதனையும் படியுங்கள் : இனி சப்பாத்திக்கு ருசியான ப்ரோக்கோலி பன்னீர் கறி இப்படி செய்து பாருங்க!

-விளம்பரம்-