லட்டு பெரும்பாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பான உணவு. பூந்தி லட்டு, உலர் பழ லட்டு என பல்வேறு வகையான லட்டுகள் கிடைக்கின்றன. வீட்டிலேயே லட்டு செய்து சாப்பிடுவது ஆரோக்கியமானது. பப்பாளி பழத்தை வைத்து சுவையான லட்டு எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம். நம்முடைய அன்றாட உணவுகளுடன் கட்டாயம் சேர்க்க வேண்டிய ஒரு பழம் தான் பப்பாளி.
இது கலோரிகளில் குறைவாக இருப்பதைத் தவிர நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகக் கருதப்படுகிறது. மேலும், உங்கள் எடையைக் குறைக்க உதவதோடு, கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் அதிகம் உள்ளது. தமனிகளில் கொலஸ்ட்ரால் உருவாவதை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி பெரிதும் உதவும். வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவற்றின் வளமான ஆதாரமாக உள்ள பப்பாளி, உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதன் மூலம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இது நோய்கள் மற்றும் தொற்றுநோய்களை விலக்கி வைக்க உதவுகிறது. இதில் லட்டு செய்து கொடுத்தால் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இதனை அனைத்து விஷேஷ தினங்கள், வீட்டில் பிறந்த நாள், திருமண நாள், சுப தினங்கள் போன்றவற்றின் போது வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுக்கலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதனை ருசித்து சாப்பிடுவார்கள்.
பப்பாளி லட்டு | Papaya Ladoo Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 பப்பாளி பழம்
- 1/2 கப் சர்க்கரை
- 1/2 கப் பால்
- 1/4 கப் பாதாம்
- 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- 3/4 கப் டேசிகேட்டட் கோகோநட்
- 1/4 கப் நெய்
- 1/4 கப் நறுக்கிய ட்ரை நட்ஸ்
செய்முறை
- முதலில் பப்பாளி பழத்தை நன்கு கழுவி விட்டு தோல் நீக்கி துருவி வைத்துக்கொள்ளவும்.
- பின் ஒரு மிக்ஸி ஜாரில் பால், ஏலக்காய் தூள் மற்றும் பாதாம் சேர்த்து விழுதாக நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து சூடானதும் துருவி வைத்துள்ள பப்பாளி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின் நாம் அரைத்து வைத்த பாலை சேர்த்து நன்கு கலந்து விட்டு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- அவ்வப்போது சிறிதளவு நெய் சேர்த்து கலந்து கொஞ்சம் கெட்டியானதும் டேசிகேடட் கோகோநட் சேர்த்து இந்து நிமிடங்கள் கலந்து விடவும்.
- அதன்பிறகு சிறிதளவு நெய் சேர்த்து, பொடி யாக நறுக்கிய நட்ஸ் சேர்த்து கலந்து நெய் பிரிந்து வரும் வரை மிதமான சூட்டில் வைத்து கிளறவும்.
- இந்த கலவை நன்கு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடவும். இந்த கலவை சிறிது சூடு ஆறியவுடன் லட்டு பிடித்த வைத்துக் கொள்ளவும்.
- ஒரு தட்டில் கொஞ்சம் டேசிகேடட் கோகோநட் எடுத்து அதில் பிடித்து வைத்துள்ள பப்பாளி லட்டுகளை பிரட்டி வைத்தால் மிகவும் சுவையான பப்பாளி லட்டு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சுவையான பப்பாளி கேசரி இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி தான்!