காலை டிபனுக்கு ஆரோக்கியமான கம்பு தோசை இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

- Advertisement -

இப்ப இருக்கிற இந்த ஜெனரேஷன்ல நம்ம சாப்பிடுற ஒவ்வொரு சாப்பாட்டையும் பார்த்து பார்த்து தான் சாப்பிடணும். ஏன்னா இப்ப நம்ம சாப்பிடுற பல உணவுகள்ல ஆரோக்கியம் அப்படின்னு சுத்தமா கிடையாது அதனால நம்ம பாட்டி தாத்தா காலத்துல அவங்க சாப்பிட்ட சிறுதானியங்கள இப்போ நம்ம திருப்பி சாப்பிட ஆரம்பிச்சா தான் நம்ம உடம்பு அவங்கள மாதிரியே ரொம்ப ஆரோக்கியமா இருக்கும்.

-விளம்பரம்-

நம்ம பொதுவா இட்லி தோசைக்கு ஒரு வாரம் வரைக்கும் இருக்க மாதிரி மாவு அரைச்சு வச்சுப்போம் ஆனா இந்த சிறுதானிய தோசைக்கு அதே மாதிரி மாவு அரைச்சு வைக்க முடியுமா அப்படி என்ற சந்தேகம் நிறைய பேருக்கு இருக்கும். அப்படியே அரைச்சு வச்சாலும் அந்த மாவு நல்லா இருக்குமா தோசை எப்படி இருக்கும் அப்படின்ற குழப்பம் நிறைய பேருக்கு இருக்கும் நீங்க எந்த குழப்பமும் பட தேவையில்லை நம்ம இட்லி தோசைக்கு மாவு அரைக்கிற மாதிரியே சிறுதானியத்திலும் மாவு அரைச்சு பிரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வச்சுக்கலாம்.

- Advertisement -

அந்த வகையில் எல்லா கடைகளிலும் ரொம்ப ஈசியா குறைவான விலையில் கிடைக்கக்கூடிய கம்பு வச்சு கம்பு தோசை எப்படி செய்றதுன்னு தான் பாக்க போறோம். கம்பு நம்ம சாப்பிடுறதால நம்ம உடம்புக்கு நிறைய ஆரோக்கியம் கிடைக்கும். இப்போ இந்த வெயில் காலத்துக்கு நம்ம கம்பு சாப்பிட்டா நம்ம உடம்பு குளிர்ச்சியா இருக்கும். அதுமட்டுமில்லாமல் கம்பு தோசை ரொம்பவே டேஸ்ட்டாவும் இருக்கும். நம்ம நார்மல் தோசைக்கு எப்படி சட்னி சாம்பார் அரைச்சு சாப்பிடுவோமோ அதே மாதிரியே இந்த கம்பு தோசைக்கும் அரைச்சு நல்ல சைடு டிஷ் வைத்து சாப்பிட்டால் அட்டகாசமான ஒரு சுவையில் இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சத்தான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

கம்பு தோசை | Pearl Miller Dosai Recipe In Tamil

கம்பு நம்ம சாப்பிடுறதால நம்ம உடம்புக்கு நிறைய ஆரோக்கியம் கிடைக்கும். இப்போ இந்த வெயில் காலத்துக்கு நம்ம கம்பு சாப்பிட்டா நம்ம உடம்பு குளிர்ச்சியா இருக்கும். அது மட்டுமில்லாமல் கம்பு தோசை ரொம்பவே டேஸ்ட்டாவும் இருக்கும். நம்ம நார்மல் தோசைக்கு எப்படி சட்னி சாம்பார்அரைச்சு சாப்பிடுவோமோ அதே மாதிரியே இந்த கம்பு தோசைக்கும் அரைச்சு நல்ல சைடு டிஷ் வைத்துசாப்பிட்டால் அட்டகாசமான ஒரு சுவையில் இருக்கும். இப்ப வாங்க இந்த ஆரோக்கியமான சத்தான அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கக்கூடிய கம்பு தோசை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast
Cuisine: tamil nadu
Keyword: Kambu Dosai
Yield: 4
Calories: 91kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு
  • 3/4 கப் புழுங்கல் அரிசி
  • 1/4 கப் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 டேபிள்ஸ்பூன் பச்சரிசி
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கம்பு பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்தம் பருப்பு அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • நன்றாக ஊறிய பிறகு மிக்ஸி ஜார் அல்லது கிரைண்டரில் சேர்த்து மிகவும் நைசாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவினை எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்.
  • பிறகு ஒரு தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி தோசையாக சுட்டு எடுத்தால் சுவையான கம்பு தோசை தயார்
  • இதனை நான்கு நாட்கள் வரை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

Nutrition

Serving: 2nos | Calories: 91kcal | Carbohydrates: 19g | Protein: 7.6g | Sodium: 84mg | Potassium: 198mg | Fiber: 1g | Iron: 0.1mg

இதையும் படியுங்கள் : இரவு டிபனுக்கு கமகமனு மொறுகலா கம்பு கார தோசை இப்படி செஞ்சி பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!