Home காலை உணவு இரவு டிபனுக்கு கமகமனு மொறுகலா கம்பு கார தோசை இப்படி செஞ்சி பாருங்கள்! 2 தோசை...

இரவு டிபனுக்கு கமகமனு மொறுகலா கம்பு கார தோசை இப்படி செஞ்சி பாருங்கள்! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் வீட்டில் அடிக்கடி சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டதால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இயந்திர மற்றும் நவீன வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவுகள் என்று இன்றைய தலைமுறையினர் பலரும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டார்கள் என்று கூறலாம். இதனால் பலரும் டயபடிஸ், உடல் பருமன், இரத்த கொதிப்பு என்று இன்னும் பல வகையான வியாதியால் அவதிப்பட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

உணவு முறைகளில் சிறு மாற்றம் செய்து அதனை முறையாக பின்பற்றினாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அப்படி சத்தான உணவுகளில் ஒரு வகையான கம்பு சேர்த்து ஒரு ரெசிபியை காண உள்ளோம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு என்று கூறலாம். கம்பு தோசை அல்லது முத்து தோசை கம்பு பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான உணவாகும், இதில் நல்ல அளவு புரதம், கார்ப்ஸ், தாதுக்கள் மற்றும் இரும்புச்சத்து உள்ளது.

அரிசிக்கு ஆரோக்கியமான மாற்று உணவுகளைச் சேர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு, காலை அல்லது இரவு உணவிற்கு கம்பு தோசை ஒரு சிறந்த உணவாகும். இந்த பாரம்பரிய செய்முறை தயாரிக்க மிகவும் எளிதானது. கம்பு தோசை ஆரோக்கியமான, அசத்தலான சுவையுடன் கூடிய அருமையான சிற்றுண்டி. சிறுதானியமான கம்பினை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்பு தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது ரத்தித்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது, கெட்ட கொழுப்புகளை கரைக்கிறது, தேவையற்ற உடல் எடையை கட்டுப்படுத்துகிறது. இந்த கம்பு‌ தோசையை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

Print
4 from 5 votes

கம்பு கார தோசை | pearl millet dosa recipe in tamil

முன்பெல்லாம் வீட்டில் இருக்கும் வயதானவர்கள் வீட்டில் அடிக்கடி சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டதால் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் தற்போது இயந்திர மற்றும் நவீன வாழ்க்கையில் துரித உணவுகள் மற்றும் மேற்கத்திய உணவுகள் என்று இன்றைய தலைமுறையினர் பலரும் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்ள மறந்து விட்டார்கள் என்று கூறலாம். இதனால் பலரும் டயபடிஸ், உடல் பருமன், இரத்த கொதிப்பு என்று இன்னும் பல வகையான வியாதியால் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு முறைகளில் சிறு மாற்றம் செய்து அதனை முறையாக பின்பற்றினாலே பல விதமான நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அப்படி சத்தான உணவுகளில் ஒரு வகையான கம்பு சேர்த்து ஒரு ரெசிபியை காண உள்ளோம்.‌
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, tamil nadu
Keyword: pearl millet dosa
Yield: 4 People
Calories: 120kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கம்பு
  • 1/2 கப் உளுந்து
  • 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 1 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • உப்பு தேவையான அளவு
  • 1/4 கப் கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கம்பு, வெந்தயம், உளுந்தை நன்கு கழுவி, ஐந்து மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • கம்பு நன்கு ஊறியதும் ஒரு‌ மிக்ஸி ஜாரில் சேர்த்து சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின்பு அத்துடன் பச்சை மிளகாய், சீரகம் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் வரை வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை கலந்து மெலிதான தோசையாக வார்த்து, மேலே கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • பின்னர் திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும்.
  • அவ்வளவுதான் இப்போது மிகவும் சுவையான சத்தான கம்பு கார தோசை சுவைக்கத்தயார்.
  • இந்த தோசைக்கு தக்காளி, வெங்காயம் சேர்த்து அரைத்த சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 120kcal | Carbohydrates: 6.8g | Protein: 12g | Fat: 0.4g | Sodium: 10mg | Potassium: 390mg | Fiber: 2.5g | Calcium: 43mg | Iron: 11.5mg

இதனையும் படியுங்கள் : கம்பு மாவில் பூரி ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க! செம சூப்பரா இருக்கும்!