கிராமத்து முறையில் பீர்க்கங்காய் தக்காளி கடையல் இப்படி செய்து பாருங்க! சுவை அருமையாக இருக்கும்!!!

- Advertisement -

தென் இந்திய உணவு வகைகளில் பீர்க்கங்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் பீர்க்கங்காயை பயன்படுத்துவோம். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பீர்க்கங்காய் வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்று வரை பீர்க்கங்காயில் குழம்பு, கூட்டு போன்றவை தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று பார்க்கப்போகும் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நம் வீட்டில் ஒதுக்கப்படும் காயாக பீர்க்கங்காய் உள்ளது. பீர்க்கங்காயில் பல வகையான சத்துக்களை கொண்டது. அதிலும் இது பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது. இது உடல் எடை குறைப்பு, ரத்த சர்க்கரை நோய், இரத்த சோகை போன்ற நோய்களுக்கு பெரிதும் உதவுகிறது. இந்த காயை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். அதனால் எல்லோருக்கும் பிடிக்கும் அளவிற்கு பீர்க்கங்காய் தக்காளி கடைசல் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

பொதுவாக தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றிற்கு சட்னி, குருமா, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக பீர்க்கங்காய் வைத்து ஒரு சட்னி போன்று கடைந்து அத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும். சுடச்சுட இட்லியோடு இதை வச்சு சாப்பிட ரொம்பவே நல்லா இருக்கும். ரெண்டு இட்லி சாப்பிடுறவங்க கூட கூட ரெண்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு அட்டகாசமா இருக்கும். இந்த கடைசல் இருந்தா போதும் அசைவம் கூட தேவைப்படாது. அந்த அளவிற்கு இதன் சுவை பிரமாதமாக இருக்கும். இது பீர்க்கங்காய், வெங்காயம், தக்காளி, ஆகியவற்றை கொண்டு செய்யப்படும் சுவையான, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க உணவு வகை. இது தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவிலும் மிகவும் பிரபலம். வீட்டிற்கு விருந்தாளி வந்தால் பீர்க்கங்காய் தக்காளி கட் செய்தால் போதும் உடனடியாக தாளித்து சுலபமான கடைசல் செய்துவிடலாம். இது இட்லிக்கு மட்டுமல்லாமல் சாதத்திற்கும் மிகவும் சுவையாக இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

பீர்க்கங்காய் தக்காளி கடைசல் | Peerkangai Tomato Kadayal Recipe In Tamil

தென் இந்திய உணவு வகைகளில் பீர்க்கங்காய் தவிர்க்க முடியாதது. சாம்பார், கூட்டு, குழம்பு என ஏதாவது ஒரு ரூபத்தில் பீர்க்கங்காயை பயன்படுத்துவோம். இன்று நாம் பார்க்கப்போகும் ரெசிபி சைவ பிரியர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த பீர்க்கங்காய் வைத்துதான் பார்க்கப்போகிறோம். நாம் இன்று வரை பீர்க்கங்காயில் குழம்பு, கூட்டு போன்றவை தான் செய்து சாப்பிட்டுருப்போம். ஆனால் இன்று பார்க்கப்போகும் ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நம் வீட்டில் ஒதுக்கப்படும் காயாக பீர்க்கங்காய் உள்ளது. பீர்க்கங்காயில் பல வகையான சத்துக்களை கொண்டது. பொதுவாக தோசை, இட்லி, சப்பாத்தி போன்றவற்றிற்கு சட்னி, குருமா, சாம்பார் என்று தான் செய்வோம். ஆனால் இப்போது சற்று வித்தியாசமாக பீர்க்கங்காய் வைத்து ஒரு சட்னி போன்று கடைந்து அத்துடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Peerkangai Tomato Kadayal
Yield: 4 People
Calories: 36kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 மத்து

தேவையான பொருட்கள்

  • 2 பீர்க்கங்காய்
  • 5 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • 2 பச்சை மிளகாய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பீர்க்கங்காய் ஆகியவற்றை கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய்‌ ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் பீர்க்கங்காய் மற்றும் தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு குக்கரை மூடி 3 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடவும்.
  • விசில் அடங்கியதும் குக்கரை திறந்து இந்த கலவையை ஒரு மத்தை வைத்து நன்கு கடைந்து விடவும். அவ்வளவுதான் சுவையான பீர்க்கங்காய் தக்காளி கடைசல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 36kcal | Carbohydrates: 3.5g | Protein: 2.8g | Fat: 1.2g | Sodium: 3mg | Potassium: 24mg | Fiber: 2.1g | Vitamin A: 14IU | Vitamin C: 23mg | Calcium: 13mg | Iron: 6mg

இதனையும் படியுங்கள் : ருசியான பீர்க்கங்காய் கருவாடு தொக்கு சுட சுட சாதத்துடன் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்!