எவ்வளவு செய்தாலும் காலியாகும் கிராமத்து ஸ்டைல் மிளகு குழம்பு இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

கோடையில் அதிகம் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடிக்கும். மேலும் வெயில் காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எனவே இக்காலத்தில் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் மிளகை குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடுவது

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : கிராமத்து மொச்சை கொட்டை கார குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

சிறந்த வழி. இங்கு மிளகு குழம்பை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்க. வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
2 from 1 vote

கிராமத்து மிளகு குழம்பு | Village style Pepper Curry in Tamil

கோடையில் அதிகம் வியர்ப்பதால், சிலருக்கு சளி பிடிக்கும். மேலும் வெயில் காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்கலாம். எனவே இக்காலத்தில் உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டும் மிளகை குழம்பு செய்து மதிய வேளையில் சாதத்துடன் சாப்பிடுவது சிறந்த வழி. இங்கு மிளகு குழம்பை எப்படி ஈஸியாக செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து பாருங்க. வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamilnadu
Keyword: Pepper curry
Yield: 4 people
Calories: 50kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 10 சின்ன வெங்காயம்
  • 10 பூண்டு
  • 1 புளி எலுமிச்சை அளவு
  • உப்பு தேவையான அளவு

வறுத்துஅரைப்பதற்கு…

  • 3 டேபிள் ஸ்பூன் மல்லி
  • 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கடலைப் பருப்பு
  • 2 டேபிள்ஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் பச்சரிசி

தாளிப்பதற்கு..

  • 6 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • கறிவேப்பிலை சிறிது

செய்முறை

  • முதலில்ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து குறைவான தீயில் பொன்னறிமாக வறுத்து இறக்கி, குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
  • பின் அதே வாணலியில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து20-30 நிமிடம் குறைவான தீயில் நன்கு கொதிக்க விட வேண்டும்
  • அடுத்துமற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், மிளகு குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 10g | Calories: 50kcal | Carbohydrates: 5g | Sodium: 250mg