கிராமத்து மொச்சை கொட்டை கார குழம்பு இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறுடன் ஊற்றி சாப்பிட்டு பாருங்க!

mochai kottai kulambu
- Advertisement -

இன்று மதியம் என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த மொச்சை கொட்டை கார குழம்பு செஞ்சி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான சேலம் குகை மொச்சைக்காய் கூட்டு குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Print
No ratings yet

மொச்சை கொட்டை கார குழம்பு | Mochai Kottai Kulambu Recipe In Tamil

இன்று மதியம் என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ இந்த மொச்சை கொட்டை கார குழம்பு செஞ்சி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க. எப்படி இந்த குழம்பு செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time26 minutes
Course: Breakfast, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: mochakottai kulambu, மொச்சக்கொட்டை குழம்பு
Yield: 4 people
Calories: 230kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 ஸ்பான் நல் லெண்ணெய்
  • 1 டீஸ்பூன் கடுகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • தேங்காய் கொஞ்சம்
  • 15 பல் பூண்டு
  • 3 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் கடலை பருப்பு
  • 1 ஸ்பூன் மிளகு
  • ½ டீஸ்பூன் வெந்தயம்
  • 2 தக்காளி நறுக்கியது
  • வெல்லம் கொஞ்சம்
  • 20 சின்ன வெங்காயம்
  • புளி சிறிய உருண்டை
  • உப்பு தேவையான அளவு
  • 2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • மஞ்சள் தூள் கொஞ்சம்
  • பெருங்காயப்பொடி கொஞ்சம்
  • 3 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள் தேவையான அளவு
  • 1 கப் மொச்சைக்கொட்டை
  • 4 கத்திரிக்காய் நறுக்கியது

செய்முறை

  • மொச்சைக்கொட்டையை இரவில் ஊற வைத்துக்கொள்ளவும்.
  • முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிந்ததும், கொஞ்சமாக வெந்தயம் சேர்த்து சிவந்ததும் சின்ன வெங்காயம் மற்றும் வர மிளகாய், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளி, மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • தக்காளி நன்கு மசிய வதங்கியதும் ஊறவைத்த மொச்சைக்கொட்டையை, மற்றும் நறுக்கிய தக்காளி சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்கவும்.
  • பிறகு புளியை நன்கு கரைத்து வடிகட்டி அதில் மிளகாய் தூள், குழம்பு தூள், மஞ்சள் தூள், சேர்த்து கரைத்து வதக்கிய மொச்சைக்கொட்டைல் ஊற்றி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து அத்துடன் பெருங்காயப்பொடி சேர்த்து கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • குழம்பு கொதிக்கும் சமையத்தில், மசாலா ரெடி பண்ணுவதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கடலை பருப்பு, வெந்தயம், மிளகு, சீரகம், சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து தேங்காயை மிக்சில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • குழம்பு சுண்டி வந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், மற்றும் வெல்லம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடியை இதில் சேர்த்து ஒரு கிண்டு கிண்டி இறக்கவும்.

Nutrition

Serving: 700G | Calories: 230kcal | Carbohydrates: 21g | Protein: 28g | Fat: 1g | Saturated Fat: 0.5g | Fiber: 13g | Sugar: 0.5g