Advertisement
சைவம்

காரசாரமான ருசியில் ஒரு தரம் பூசணிக்காய் கார குழம்பு இப்படி செய்து பாருங்க! சாதத்துடன் சாப்பிட அவ்வளவு அருமையாக இருக்கும்!

Advertisement

மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். பல வீடுகளில் நான்கு, ஐந்து காய்களை தவிர மற்ற காய்கறிகளை சமைத்து இருக்கவே மாட்டார்கள் காய்கறி என்று சொன்னால் அனைத்து விதமான காய்கறிகளிலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. எனவே எந்த ஒரு காய்கறியையும் ஒதுக்குவது என்பது கூடாது. அவ்வாறு இந்த வெண்பூசணி காயையும் சமையலில் பயன்படுத்தலாம் என்பதே பலருக்கும் தெரியாத ஒரு விஷயமாக இருக்கிறது.

ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 15 நிமிடங்களில் அட்டகாசமான சுவையில் குழம்பு செய்து விடலாம். இந்த வெண் பூசணியை வைத்து சாம்பார், கூட்டு, பொரியல், அல்வா போன்ற பலவித உணவுகளை சமைக்கலாம். இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தை வெகுவாக குறைக்க முடிகிறது. பலவகையான மருத்துவ குணம் கொண்ட பூசணிக்காய் குழம்பு போல செய்து சாப்பிட நெஞ்சு சளி, சரும பாதிப்பு, சிறுநீரக கோளாறு, உடல் சூடு, பித்தம் போன்றவற்றை குணமாக்கி ஆயுளை அதிகரிக்கும். வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பூசணிக்காய் குழம்பு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவருக்கும் பிடிக்கும்.

Advertisement

பூசணிக்காய் கார குழம்பு | Poosanikai Kara Kulambu Recipe In Tamil

Print Recipe
மதிய வேளையில் சாப்பாட்டுக்கு என்ன குழம்பு செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். பூசணியை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில் அதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. அதோடு, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்தால் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். மேலும் இதில் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படும். ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 15 நிமிடங்களில் அட்டகாசமான சுவையில் குழம்பு செய்து விடலாம். பலவகையான
Advertisement
மருத்துவ குணம் கொண்ட பூசணிக்காய் குழம்பு போல செய்து சாப்பிட நெஞ்சு சளி, சரும பாதிப்பு, சிறுநீரக கோளாறு, உடல் சூடு, பித்தம் போன்றவற்றை குணமாக்கி ஆயுளை அதிகரிக்கும். வாரத்தில் ஒரு நாள் இது போன்று இந்த பூசணிக்காய் குழம்பு செய்து பாருங்கள் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian
Keyword Poosanikai Kara Kulambu
Prep Time 10 minutes
Cook Time 15 minutes
Total Time 25 minutes
Servings 4 People
Calories 69

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 வாணலி

Ingredients

  • 1 கப் வெண் பூசணிக்காய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1/4 கப் புளி கரைசல்

தாளிக்க :

  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 2 வர ‌மிளகாய்

அரைக்க :

  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 2 டீஸ்பூன் மல்லி
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மிளகு
  • 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1 பெரிய வெங்காயம்
  • 1 தக்காளி
  • 5 பல் பூண்டு

Instructions

  • முதலில் பூசணிக்காயை தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் மல்லி, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, சீரகம், மிளகு, பெருங்காயம், வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • பின் பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கி தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வதக்கி ஆற விடவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • அதன்பிறகு பூசணிக்காய் மற்றும் மஞ்சள் தூள், சாம்பார் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் குழம்புகளுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைக்கவும்.
  • பின் புளிக்கரைசல் மற்றும் நாம் அரைத்த விழுதை சேர்த்து சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு கொதிக்க விடவும்.
  • பின் கடுகு, சீரகம், பெருங்காயத்தூள், வெந்தயம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். அவ்வளவுதான் சுவையான பூசணிக்காய் காரக்குழம்பு தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 69kcal | Carbohydrates: 12g | Protein: 4.8g | Fat: 1.17g | Sodium: 4mg | Potassium: 340mg | Fiber: 2.7g | Vitamin A: 738IU | Vitamin C: 9mg | Calcium: 21mg | Iron: 2.8mg

Advertisement
Prem Kumar

Recent Posts

காலை உணவிற்கு ஏற்ற‌ கொண்டைக்கடலை சாலட் இப்படி செய்து பாருங்கள் ஆரோக்கியமும், சுவையும் நிறைந்திருக்கும்!!!

நம்முடைய உணவுப் பட்டியலில் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கின்ற பொருட்களில் கொண்டக்கடலைக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. கொண்டக்கடலையை வெகு எளிமையாக தயார்…

1 மணி நேரம் ago

இன்றைய ராசிபலன் – 26 ஜூன் 2024!

மேஷம் வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். இன்று வீட்டிலும், பணியிடத்திலும் சரியான திட்டமிடலும், ஒழுக்கத்தையும்…

5 மணி நேரங்கள் ago

சங்கடம் தீர்க்கும் ஆனி மாத சங்கடஹர சதுர்த்தி

விக்னங்களை தீர்க்கக் கூடியவர் விநாயகப் பெருமான். முழு முதற் கடவுளாக போற்றப்படும் விநாயகர் தடைகள், துன்பங்கள், தோஷங்கள் போன்ற அனைத்து…

16 மணி நேரங்கள் ago

இந்த வாரம் உங்க வீட்ல சிக்கன் எடுத்தா குக் வித் கோமாளியில் பூஜா செய்த சிக்கன் ஃபிரிக்காசி செஞ்சு பாருங்க!

சிக்கன் ஃபிரிக்காசி அப்படின்னா என்னன்னு ஒரே குழப்பமா இருக்கா ஒயிட் சிக்கன் தான் இந்த மாதிரி சொல்றோம் இதோட டேஸ்ட்…

21 மணி நேரங்கள் ago

மதிய வேளை உணவிற்கு சுவையாக அதேசமயம் எளிமையான புடலங்காய் தயிர் கூட்டு இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!

பொதுவாக மதிய நேர சாப்பாட்டிற்கு என்ன செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்போம். ஆனால் இனி சிந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.…

1 நாள் ago

எப்போதும் ஒரே மாதிரியான சாம்பார் வைத்து போர் அடித்து விட்டதா அப்படியானால் இந்த வித்தியாசமான மா வத்தல் சாம்பாரை ட்ரை செய்து பாருங்கள்!!!

சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு வகைதான் சாம்பார். எந்தக் காய்கறி வைத்தும் தயார்…

2 நாட்கள் ago