காரசாரமான ருசியில் பூசணிக்காய் புளிக்குழம்பு இனி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பூசணிக்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பூசணிக்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது.

-விளம்பரம்-

பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நீர்ச்சத்து அதிகம் நிறைந்த பூசணிக்காயை கோடைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்வதால், உடல் நீரேற்றத்துடன் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான குழம்பு செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் உங்களுக்கு பிடிக்குமாறு அற்புதமான சுவையுடன் இருக்கும். மேலும் இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும். இந்த குழம்பு சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சாப்பிடவும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.

- Advertisement -
Print
No ratings yet

பூசணிக்காய் புளிக்குழம்பு | Poosanikai PuliKulambu Recipe In Tamil

இன்று மதியம் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? இதுவரை வீட்டில் செய்திராத ஒரு குழம்பை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பூசணிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த பூசணிக்காய் கொண்டு குழம்பு செய்யுங்கள். தினமும் நாம் சமைக்க கூடிய சமையல் நாவிற்கு ருசியாக இருக்கிறதா என்று தான் நாம் பார்க்கிறோமே தவிர அது உடலுக்கு எந்த அளவிற்கு ஊட்டச்சத்தை தருகின்றது என்பதை இன்றைய சூழ்நிலையில் கவனிப்பதே கிடையாது. அந்த வரிசையில் உடலுக்கு அதிகப்படியான நீர் சத்தை, நார் சத்தையும் கொடுக்கக்கூடிய பூசணிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். பூசணிக்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் பூசணி மிகவும் ஏற்றது. உங்களுக்கு பூசணிக்காய் பிடிக்குமானால், இதுவரை அதைக் கொண்டு பொரியல் மட்டும் தான் செய்துள்ளீர்கள் என்றால், இனிமேல் அதைக் கொண்டு அட்டகாசமான குழம்பு செய்து சாப்பிடுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Poosanikai PuliKulambu
Yield: 4 People
Calories: 49kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 பூசணிக்காய்
  • 1/2 கப் புளி கரைசல்
  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தனியா
  • 1 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 6 வர ‌மிளகாய்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/4 கப் தேங்காய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 துண்டு வெல்லம்
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் துவரம் பருப்பு

செய்முறை

  • முதலில் பூசணிக்காயை சுத்தம் செய்து, தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தனியா, வெந்தயம், கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, துவரம் பருப்பு, வர மிளகாய், பச்சை மிளகாய், தேங்காய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வேக விடவும்.
  • பின் சாம்பார் தூள் மற்றும் புளிக்கரைசலை சேர்த்து மூடி போட்டு கொதிக்க விடவும். இது கொதித்ததும் நாம் அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் வெல்லம் சேர்த்து கலந்து குழம்பு நன்கு கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • ஒரு தாளிப்பு கரண்டியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, வெந்தயம், உளுந்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து குழம்பில் சேர்த்து கலந்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, வித்தியாசமான பூசணிக்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 49kcal | Carbohydrates: 12g | Protein: 8.17g | Fat: 2.4g | Sodium: 5mg | Potassium: 340mg | Fiber: 2.7g | Vitamin A: 73IU | Vitamin C: 9mg | Calcium: 21mg | Iron: 8mg

இதனையும் படியுங்கள் : உடல் சூட்டை தனிக்கும் பூசணிக்காய் மோர் குழம்பு இப்படி செய்து பாருங்கள்!