குழந்தைங்க இருக்கிற வீட்ல எப்பவுமே ஸ்னாக்ஸ் வாங்கி வச்சுக்கணும் அப்படின்னு சொல்லுவாங்க ஏன்னா அவங்க எப்போ எந்த நேரத்தில் ஸ்நாக்ஸ் கேட்டு அழுவாங்க அப்படின்னு தெரியாது. ஆனா உங்க வீட்டுல ஸ்னாக்ஸ் இல்லனாலும் பரவால்ல அரிசி மட்டும் இருந்தாலே போதும் உங்களால ஈஸியா சூப்பரான ஒரு ஸ்நாக்ஸ் செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுக்க முடியும். இந்த ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு ரொம்ப சூப்பரா இருக்கும் அரிசி வச்சு செய்யக்கூடிய பொரிவிலங்கை உருண்டை தான் செய்யப் போறோம்.
ரொம்பவே இனிப்பா சாப்பிடுவதற்கும் ரொம்ப டேஸ்ட்டா இருக்கும் மூணே மூணு பொருள் வைத்து ஈஸியா இந்த பொரிவிலங்கை உருண்டை நம்மளால செய்ய முடியும். இந்த பொறிவிலங்கை உருண்டைக்கு நம்ம புழுங்கல் அரிசியை மட்டும் தான் யூஸ் பண்ணனும். வேற எந்த அரிசியையும் பயன்படுத்தினால் அவ்வளவு டேஸ்டா நமக்கு கிடைக்காது.
குழந்தைங்க மட்டுமில்லாம வீட்ல இருக்குற பெரியவங்களும் இந்த ஸ்நாக்ஸ் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க மூணு நாள் வரைக்கும் இத நம்ம ஸ்டோர் பண்ணி வச்சு சாப்பிடலாம். என்னை எதுவுமே இல்லாமல் ரொம்பவே ஆரோக்கியமாக செய்யக் கூடிய இந்த பொரிவிலங்கை உருண்டை ரொம்பவே ஆரோக்கியமானதும் கூட. இப்ப வாங்க இந்த டேஸ்டான சூப்பரான பொரிவிலங்கை உருண்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
பொரிவிலங்கை உருண்டை | Porivilangai Urundai Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 1 கப் புழுங்கல் அரிசி
- 3/4 கப் வெல்லம்
- 1 கப் தேங்காய்துருவல்
செய்முறை
- ஒரு கடாயில் அரிசியை சேர்த்து நன்றாக பொரிந்து வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
- பிறகு அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து உடன் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும் தேன் பதத்திற்கு வந்தவுடன் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
- வெல்லப்பாகு சூடாக இருக்கும் போதே அதில் அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
- பிறகு தேங்காய் துருவலையும் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடித்து வைத்தால் சுவையான பொரிவிலங்கை உருண்டை தயார்
Nutrition
இதையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் 90’sகிட்ஸ் மாவு உருண்டை இப்படி ஓரு தரம் செஞ்சி பாருங்க!