உருளைக்கிழங்கு வச்சு சூப்பரா இல்ல உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

- Advertisement -

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிச்ச இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் ஒரு தடவை செஞ்சு கொடுங்க அவங்க ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. குழந்தைங்க இப்ப வீட்ல இருக்காங்க அதனால அவங்களுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஸ்னாக்ஸ் செய்து கொடுத்தா தான் அவங்க சமத்தா வீட்டில் அந்த வகையில் இந்த சூப்பர் டேஸ்டான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் அவங்களோட ஃபேவரட் ஆகவே மாறிடும்.

-விளம்பரம்-

உருளைக்கிழங்கு வச்சு என்னதான் நம்ம நிறைய ஸ்னாக்ஸ் செஞ்சாலும் இந்த சீஸ் பால்ஸ் இன்னும் சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரைஸ் உருளைக்கிழங்கு கட்லெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் அப்படின்னு உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய நிறைய ஸ்னாக்ஸ் நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும்.

- Advertisement -

இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்றது ரொம்பவே ஈஸி தான் கஷ்டம் கிடையாது. டீ காபி குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸை கூட வச்சு சாப்பிடலாம் ரொம்ப அருமையா இருக்கும். வாங்க இந்த சூப்பரான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் | Potato Cheese Balls In Tamil

உருளைக்கிழங்கு வச்சு என்னதான் நம்ம நிறைய ஸ்னாக்ஸ் செஞ்சாலும் இந்த சீஸ் பால்ஸ் இன்னும் சூப்பரா இருக்கும். உருளைக்கிழங்கு பிரெஞ்ச் ப்ரைஸ் உருளைக்கிழங்கு கட்லெட் உருளைக்கிழங்கு சிப்ஸ் அப்படின்னு உருளைக்கிழங்கு வைத்து செய்யக்கூடிய நிறைய ஸ்னாக்ஸ் நிறைய பேருக்கு ஃபேவரட்டா இருக்கும். இந்த உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் செய்றது ரொம்பவே ஈஸி தான் கஷ்டம் கிடையாது. டீ காபி குடிக்கும் போது இந்த ஸ்நாக்ஸை கூட வச்சு சாப்பிடலாம் ரொம்ப அருமையா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: evening, snacks
Cuisine: tamil nadu
Keyword: Potato Cheese Balls
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 உருளைக்கிழங்கு
  • 1/4 கப் சீஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு
  • 1/4 டீஸ்பூன் மிளகுதூள்
  • 1 டீஸ்பூன் சில்லி பிளேக்ஸ்
  • 1/4 கப் பிரட் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • உருளைக்கிழங்கு குக்கரில் சேர்த்து அதனுடன் உப்பு சேர்த்து இரண்டு விசில் விட்டு எடுக்கவும்
  • வேக வைத்த உருளைக்கிழங்கை தோல் உரித்து மசித்து கொள்ளவும்.
  • அதனுடன் மிளகுத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்
  • பிறகு ஒரு பாத்திரத்தில் சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
  • கலந்து வைத்துள்ள மாவை தட்டையாக தட்டி அதில் சீஸை வைத்து அதனை உருட்டி வைக்கவும்.
  • பிறகு அதனை சோள மாவு கலந்த தண்ணீரில் முக்கி பிரட் தூளில் பிரட்டி எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸ் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Cholesterol: 12mg | Potassium: 104mg | Calcium: 13mg

இதையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் உருளைக்கிழங்கு சுக்கா இனி இப்படி செஞ்சி பாருங்க! சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட பக்காவாக இருக்கும்!