காலை டிபனுக்கு சூப்பரான உருளைக்கிழங்கு மிளகு வடை இப்படி செஞ்சி பாருங்க! ஒரு கூட மிச்சம் வைக்காம சாப்பிடுவார்கள்!

- Advertisement -

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் உருளைக்கிழங்கு மிளகு வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உருளைக்கிழங்கில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நறுக்குவதும் சுலபம், சமைப்பதும் சுலபம்.

-விளம்பரம்-

வீட்டிற்கு யாராவது திடீரென விருந்தாளி வந்து விட்டாலோ அல்லது நமக்கே கூட ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், டிபனுக்கு சைடிஷ் ஆக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும் முதலில் ஞாபகத்துக்கு வருவது வடை தான். ஆனால் இதற்கு பருப்பு ஊற வைத்து அரைத்து என வேலை கொஞ்சம் அதிகமாக நீளும் என்பதால் பெரும்பாலும் இதை செய்ய சோம்பல் பட்டு விடுகிறோம். இனி அதற்கு அவசியமே இல்லை வடை சாப்பிட வேண்டும் என்று நினைத்த பத்தாவது நிமிடத்தில் சுடச்சுட உருளைக்கிழங்கு மிளகு வடை ரெடி பண்ணிடலாம். இந்த வடை மிகவும் ருசியாக, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.

- Advertisement -
Print
5 from 1 vote

உருளைக்கிழங்கு மிளகு வடை | Potato Milagu Vadai Recipe In Tamil

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ – க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முடியாது. அப்படி வாழைப்பூ வடை, பருப்பு வடை என சாப்பிட்ட நீங்கள் உருளைக்கிழங்கு மிளகு வடை சாப்பிட்டிருக்கீங்களா..? ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். உருளைக்கிழங்கில் பலவித சத்துக்கள் நிறையந்துள்ளன. நறுக்குவதும் சுலபம், சமைப்பதும் சுலபம். இந்த வடையை எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்ததும் சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Potato Milagu Vadai
Yield: 4 People
Calories: 164kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 வாணலி

தேவையான பொருட்கள்

  • 3 பெரிய உருளைக்கிழங்கு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 துண்டு இஞ்சி
  • 2 டீஸ்பூன் மிளகு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1/4 கப் கொத்தமல்லி
  • 1/4 கப் அரிசி மாவு
  • 1 கொத்து கறிவேப்பில்லை
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் உருளைக்கிழங்கை ஒரு‌ குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் காரட் துருவலில் துருவி எடுத்து நன்கு கட்டி இல்லாமல் மசித்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் உருளைக்கிழங்கு, வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நன்கு கலந்து அரிசி மாவு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்து உளுந்த வடை தட்டுவது போல் தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு மிளகு வடை தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 164kcal | Carbohydrates: 3.7g | Protein: 4.6g | Fat: 2g | Sodium: 4mg | Potassium: 260mg | Fiber: 4g | Vitamin A: 6IU | Vitamin C: 27mg | Calcium: 20mg | Iron: 6.1mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா போண்டா ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!