Advertisement
அசைவம்

காரசாரமான உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு இப்படி செய்து பாருங்க! வாசனையும், சுவையும் அசத்தலாக இருக்கும் !

Advertisement

ஒரு சிலர் கோழிக் கறியைத் தவிர்த்து ஆட்டுக்கறியை மட்டுமே வாங்கி சமைத்து சாப்பிடுவார்கள். வித்தியாசமான முறையில் இவ்வாறு உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு செய்து கொடுத்து பாருங்கள். மிகவும் அசத்தலான சுவையில் இருக்கும். ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு இங்கு கொடுத்துள்ள பதிவில் உள்ளது போல் செய்து பாருங்கள் , ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு | Potato Mutton Gravy in Tamil

Print Recipe
ஒரு சிலர் சமைக்கும் உணவு மிகவும் சுவையுள்ளதாகவும், ஒருசிலர் கைப்பக்குவத்தில் அவர்கள் சமைப்பது சுவை சற்று குறைவாகவும் இருக்கும். உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு இங்கு கொடுத்துள்ள பதிவில் உள்ளது போல் செய்து பாருங்கள் , ஒரு முறை சுவைத்து விட்டால் மீண்டும் அடிக்கடி இவ்வாறு செய்து சாப்பிடுவீர்கள். வாருங்கள் இதனை எப்படி சமைக்க வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Course LUNCH
Cuisine Indian, tamilnadu
Keyword mutton, மட்டன்
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4 people
Calories 223

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 கடாய்

Ingredients

  • 1/2 கிலோ மட்டன்
  • 1 வெங்காயம் நறுக்கியது
  • 2 உருளைக்கிழங்கு
  • 2 தக்காளி
  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 2 டீஸ்பூன் மல்லித் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 1 கப் தயிர்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • கொத்தமல்லி சிறிது

Instructions

  • முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் குக்கரை அடுப்பில்
    Advertisement
    வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நல்ல மணம் வரும் வரை வதக்க வேண்டும்.
  • பின்புஅதில் மட்ட போட்டு 2 நிமிடம் நன்கு பிரட்டி விட வேண்டும். அடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, நன்கு 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
  • பிறகுஅதில் தயிர் ஊற்றி கிளறி 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
  •  
    பின்விசிலானது போனதும், குக்கரை திறந்து அதில் உருளைக்கிழங்கு சேர்த்து, மீண்டும் குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, விசில் போனப் பின் குக்கரை திறந்து கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு மட்டன் குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 200g | Calories: 223kcal | Carbohydrates: 15g | Protein: 9.7g | Fat: 75g | Cholesterol: 7mg | Sodium: 1305mg | Potassium: 188.7mg | Fiber: 0.9g | Sugar: 0.5g | Calcium: 14mg | Iron: 1.6mg
Advertisement
Advertisement
Prem Kumar

Recent Posts

சூரியனின் அருளைப் பெற அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்ய வேண்டும்?

கிரகங்களில் முதன்மையான கிரகமாக சூரிய பகவான் கருதப்படுகிறார். எனவே, அனைத்து வழிபாடுகளிலும் சூரிய பகவானை வழிபடும் முறையை பின்பற்றுகிறோம். அதுமட்டுமின்றி…

10 நிமிடங்கள் ago

கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

தென்னிந்திய சமையலில் காலை உணவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இட்லி, தோசை, பூரி, கிச்சடி, பொங்கல், வடை, சாம்பார் போன்ற…

2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 04 மே 2024!

மேஷம் இன்று அதிகம் சாப்பிடாதீர்கள். பொருளாதாரப் பக்கம் வலுப்பெற வாய்ப்புள்ளது. இன்று வீடு பராமரிப்பு அல்லது மாற்றம் தொடர்பான திட்டங்களை…

4 மணி நேரங்கள் ago

கிவி தர்பூசணி வாங்கி சூப்பரான கிவி தர்பூசணி மாக்டெயில் இப்படி செய்து கொடுத்து அசத்துங்கள்!

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம்.…

14 மணி நேரங்கள் ago

குருபகவான் மற்றும் சூரிய பகவானின் சேர்க்கை நடைபெறும் மே மாதத்திற்கான ராசி பலன்கள்

மே மாதத்தில் குரு பெயர்ச்சி பலன்கள் ஏற்கனவே பல ராசிகளுக்கு தாக்கம் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது அந்த வகையில் மே மாதத்தில்…

16 மணி நேரங்கள் ago

ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு இந்த சூப்பரான இட்லி மாவு போண்டா செஞ்சு சாப்பிடுங்க!

மாலை நேரத்தில் எப்பவுமே டீ காபியோட ஏதாவது ஒரு ஸ்னாக்ஸ் சாப்பிட்டால் நல்லா இருக்கும் அப்படின்னு தோணும் ஆனா கடைகள்ல…

16 மணி நேரங்கள் ago