பிரான் வாங்கினா ஒரு தடவை இந்த மாதிரி பிரான் 65 செஞ்சு சாப்பிட்டு பாருங்க.

- Advertisement -

பொதுவா சின்ன குழந்தைகளுக்கு இருந்து பெரியவங்க வரைக்கும் கிரேவியா சாப்பிடுவதை விட பொறித்து வறுத்து சாப்பிட தான் ரொம்பவே பிடிக்கும். ஏன்னா அதுதான் நல்லா சாப்பிடுவதற்கு மொறு மொறுன்னு கிறிஸ்பியா அட்டகாசமான டேஸ்ட்ல இருக்கும். அந்த வகையில நம்ம சிக்கன் 65 சோயா 65 காலிஃப்ளவர் 65 அப்படின்னு நிறைய 65 சாப்பிடும் அது எல்லாமே நமக்கு ரொம்பவே பிடிச்ச ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி கூட சொல்லலாம்.

-விளம்பரம்-

அந்த வகையில இப்ப நம்ம பிரான் வச்சு செய்யக்கூடிய 65 தான் பாக்க போறோம். இந்த பிரான் 65 செய்வது ரொம்பவே ஈசி ரொம்ப குறைவான பொருட்களை வச்சு ஒரு அட்டகாசமான டேஸ்ட்ல நம்ம பிரான் 65 செய்யலாம். நம்ம பிக் சைடு போகும்போது நல்லா அந்த பீச் காத்துக்கு ஒரு ஓரமா இந்த பிரான் 65 வறுத்து வச்சிருந்தாங்கன்னா நல்லா என்ஜாய் பண்ணிட்டே அதை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவுக்கு ஒரு அட்டகாசமான பிரான் 65 நம்ம வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம்.

- Advertisement -

இந்த பிரான்65 வீட்ல செஞ்சோம் அப்படின்னா ரெண்டு நிமிஷத்துல ஃபுல்லா காலி ஆகிவிடும். இத சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அப்படி இல்லன்னா ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். குழந்தைங்க ஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டா கூட அவங்களுக்கு மாலை நேரத்தில இந்த சூப்பரான பிரான் 65 செஞ்சு கொடுத்து அசத்தலாம். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும் இத நீங்க ஈவ்னிங் ஸ்னாக்ஸா செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க ரொம்ப குறைவான பொருட்களை வச்சு அருமையான அட்டகாசமான டேஸ்டான பிரான் 65 எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

பிரான் 65 | Prawn 65 Recipe in Tamil

ஒரு அட்டகாசமான பிரான் 65 நம்ம வீட்டிலேயே செஞ்சு சாப்பிடலாம்.இந்த பிரான்65 வீட்ல செஞ்சோம் அப்படின்னா ரெண்டு நிமிஷத்துல ஃபுல்லா காலி ஆகிவிடும்.இத சைடு டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம் அப்படி இல்லன்னா ஸ்னாக்ஸ் ஆகவும் சாப்பிடலாம். குழந்தைங்கஏதாவது ஸ்னாக்ஸ் கேட்டா கூட அவங்களுக்கு மாலை நேரத்தில இந்த சூப்பரான பிரான் 65 செஞ்சுகொடுத்து அசத்தலாம். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கும்இத நீங்க ஈவ்னிங் ஸ்னாக்ஸா செஞ்சு கொடுக்கலாம் ரொம்பவே விரும்பி சாப்பிடுவாங்க. இப்பவாங்க ரொம்ப குறைவான பொருட்களை வச்சு அருமையான அட்டகாசமான டேஸ்டான பிரான் 65 எப்படிசெய்வது என்று பார்க்கலாம்
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: starters
Cuisine: tamil nadu
Keyword: Prawn 65
Yield: 4
Calories: 305kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ பிரான்
  • 1 டேபிள்ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 இஞ்சி பூண்டு விழுது
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டேபிள்ஸ்பூன்  அரிசி மாவு
  • 1 டேபிள்ஸ்பூன்  சோள மாவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை

செய்முறை

  • முதலில் பிரானை நன்கு மஞ்சள் தூள் சேர்த்து கழுவி எடுத்துக் கொள்ளவும்.
  • பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் உப்பு சேர்த்துகிளறவும்
  • அதன் பிறகு அதில் சோள மாவு அரிசி மாவு எலுமிச்சை சாறு ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து ஒரு மணிநேரம் பிரிட்ஜுக்குள் வைத்து ஊற வைக்கவும்
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்துள்ள பிரானை சேர்த்து பொரித்து எடுத்தால்சுவையான பிரான் 65 தயார்

Nutrition

Serving: 300g | Calories: 305kcal | Carbohydrates: 230g | Protein: 33g | Sodium: 223mg | Potassium: 83.2mg | Vitamin A: 13IU | Calcium: 23.34mg

இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊற தலப்பாகட்டி இறால் பிரியாணி இது போன்று வீட்டிலயே செஞ்சி பாருங்க!