எவ்வளவு செய்தாலும் காலியாகும் அடுத்த முறை இறால் வறுவல் இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

கடல் உணவுகளில் மீன் இறால் கணவாய் நண்டு சிற்பி அப்டின்னு என்னதான் நிறைய அசைவ உணவுகள் கிடைச்சாலும் மீன்லையே விதவிதமா நிறைய வகைகள் மீன் கிடைச்சாலும் இறால் நம்ம எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். இறால் பார்ப்பதற்கு நிறைய இருக்கும் ஆனா சுத்தம் செஞ்சுட்டு பார்த்தால் ரொம்ப வேகமாக இருக்கும் ஆனால் டேஸ்ட் ரொம்பவே அதிகமா இருக்கும்.

-விளம்பரம்-

அந்த இறால் ல நம்ம பிரியாணி கிரேவி வறுவல், மிளகு இறால் என நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா ஹோட்டல்ல கிடைக்குற மாதிரி ஒரு இறால் வருவல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். ரொம்ப வெரி டேஸ்டா ஈஸியா செய்யக்கூடிய இந்த இறால் வறுவலுக்கு ரொம்பவே கம்மியான பொருட்கள்தான் தேவை. இட்லி, தோசை, வெறும் சாதம் பிரியாணியில் எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிட்டா சுவை அருமையாக இருக்கும். அந்த அளவுக்கு சுவை இருக்கக்கூடிய இந்த இறால் வருவல் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

இறால் வறுவல் | Prawn Fry Recipe In Tamil

இறால் நம்ம பிரியாணி கிரேவி வறுவல், மிளகு இறால் என நிறைய செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா ஹோட்டல்லகிடைக்குற மாதிரி ஒரு இறால் வருவல் செஞ்சு சாப்பிட்டு இருக்க மாட்டோம். ரொம்ப வெரிடேஸ்டா ஈஸியா செய்யக்கூடிய இந்த இறால் வறுவலுக்கு ரொம்பவே கம்மியான பொருட்கள்தான் தேவை.இட்லி, தோசை, வெறும் சாதம் பிரியாணியில் எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிட்டா சுவைஅருமையாக இருக்கும். அந்த அளவுக்கு சுவை இருக்கக்கூடிய இந்த இறால் வருவல் எப்படி செய்வதுஎன்று வாங்க பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Fry, LUNCH, starters
Cuisine: tamil nadu
Keyword: prawn fry
Yield: 4
Calories: 371kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள்
  • 20 சின்ன வெங்காயம்
  • 7 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவிய பின்பு அதில் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள்சேர்த்து ஒரு மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்துவிட்டு வெங்காயம் மற்றும்இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
  • வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது நன்றாக வதங்கிய பிறகு ஒரு மணி நேரம் ஊற வைத்துள்ள இறாலைஅதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இறால் நன்றாக வெந்தவுடன் அதனை நன்றாக சுருள வதக்க வேண்டும்.
  • இப்பொழுது சுட சுட ருசியான இறால் வருவல் சுலபமான முறையில் தயார்.

செய்முறை குறிப்புகள்

இதனை இட்லி தோசை சப்பாத்தி வெறும் சாதம் தயிர் சாதம் என அனைத்திற்கும் வைத்து சாப்பிடலாம்.
 

Nutrition

Serving: 400g | Calories: 371kcal | Carbohydrates: 94g | Protein: 2.2g

இதையும் படியுங்கள் : ஹைதராபாத் அப்பல்லோ இறால் வறுவல் இப்படி செய்தால் கொஞ்சம் கூட மிச்சமாகாது! வீட்டிலும் அடிக்கடி செய்து தர சொல்லி கேட்பார்கள்!