வீட்டிலேயே சுவையான இறால் கிரேவி செய்யலாம் வாருங்கள்.

- Advertisement -

பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டன், மீன் இது போன்ற உணவுகளை தவிர வேறு அசைவ உணவுகள் பொதுவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதை ருசியாக சமைக்க முடியுமா என்பதை அவர்களுக்கான சவாலாக இருக்கும். ஆகையாலே பலரது வீட்டில் இறால், நண்டு இது போன்ற கடல் உணவுகள் ஹோட்டல் சென்றால் மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் நாம் இன்று சுவையான இறால் கிரேவி வீட்டிலேயே எப்படி சுவையாக சமைப்பது என்று இந்த சமையல் தொகுப்பில் காணலாம். மேலும் இறாலை சுத்தம் செய்யும் முறை, இறால் கிரேவிக்கு தேவையான பொருட்கள், அதற்கான செய்முறைகள் என அனைத்தையும் இதில் காணலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

வீட்டிலேயே சுவையான இறால் கிரேவி செய்யலாம் வாருங்கள்….

பெரும்பாலான வீடுகளில் சிக்கன், மட்டன், மீன் இது போன்ற உணவுகளை தவிர வேறு அசைவ உணவுகள் பொதுவாக சமைக்க மாட்டார்கள். ஏனென்றால் அதை ருசியாக சமைக்க முடியுமா என்பதை அவர்களுக்கான சவாலாக இருக்கும். ஆகையாலே பலரது வீட்டில் இறால், நண்டு இது போன்ற கடல் உணவுகள் ஹோட்டல் சென்றால் மட்டும் ஆர்டர் செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் நாம் இன்று சுவையான இறால் கிரேவி வீட்டிலேயே எப்படி சுவையாக சமைப்பது என்று இந்த சமையல் தொகுப்பில் காணலாம். மேலும் இறாலை சுத்தம் செய்யும் முறை, இறால் கிரேவிக்கு தேவையான பொருட்கள், அதற்கான செய்முறைகள் என அனைத்தையும் இதில் காணலாம்.
Prep Time30 minutes
Active Time20 minutes
Total Time50 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: prawn gravy, இறால் கிரேவி
Yield: 4

Equipment

  • 1 கடாய்
  • மிக்ஸி
  • 2 குழம்பு பாத்திரம்

தேவையான பொருட்கள்

  • 250 kg இறால்
  • ¼ கப் சின்ன வெங்காயம்
  • 6 பல் பூண்டு                          
  • 2 தக்காளி                      
  • ¼ tbsp மஞ்சள்தூள்
  • 1 tbsp மிளகாய்த்தூள்
  • 2 tbsp மல்லித்தூள்
  • ¾ tbsp கரம் மசாலா
  • கொத்தமல்லி சிறிது
  • உப்பு தேவையானஅளவு
  • 1 tbsp இஞ்சி,பூண்டு விழுது

தாளிப்பதற்கு

  • 2 tbsp எண்ணெய்
  • 2 piece பட்டை
  • 2 piece கிராம்பு
  • 1 leaf பிரியாணி இலை
  • கருவப்பிலை சிறிது

அரைப்பதருக்கு

  • ¼ கப் தேங்காய் துருவியது
  • 1 tbsp சோம்பு

செய்முறை

  • செய்முறை
  • முதலில் 250 kg ப்ரெஷ்ஷான விரலை நன்கு பார்த்து வாங்கிக் கொள்ளவும் வாங்கிக் கொண்ட இறாலை ஒருமுறை தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
  • பின்பு இறாலின் தலையை கிள்ளி எடுத்துவிட்டு அதன் வயிற்றுப் பகுதியில் ஜவ்வு போன்ற இருக்கும் தோலை உரித்தெடுக்க வேண்டும் அதன் பின் மேலிருக்கும் இறாலின் கூடை இழுத்தால் சதை தனியாக தோல் தனியாக வந்து விடும்.
  • இவ்வாறு பிரித்தெடுத்த இறாலை இரண்டு முறை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்துக் கொள்ளவும். பின்பு இந்த இறாலுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
  • சிறிது நேரம் இறால் இந்த மசாலாவுடன் ஊற வையுங்கள். இறால் மசாலாவுடன் ஊறிக்கொண்டு இருக்கும் பொழுது, மிக்சியில் தேங்காய், சோம்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மை போன்று அரைத்துக் கொள்ளுங்கள்.
  • அடுத்து கடாயை அடுப்பில் வைத்து தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். என்னை சுடேரியவுடன் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் சேர்த்து நன்றாக தாளிக்கவும்.
  • அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்பு தக்காளி, மல்லித்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாடை போகும் வயை நன்றாக வதக்கவும்.
  • மசாலா பொருட்கள் நன்றாக வதங்கியவுடன் ஊறவைத்த இறாலை கடாயில் சேர்த்து ஒரு நான்கு நிமிடங்கள் இறால் சுருங்கும் வரை நன்றாக கிளறி விடவும். பின் உங்களுக்கு எந்த அளவு கிரேவி கட்டியாக வேண்டுமோ அந்த அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விடுங்கள்.
  • இறால் வெந்ததும், பின்பு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொண்டு கிளரி விட்டு அப்புறம் அரைத்துள்ள தேங்காய் சேர்த்து தேங்காய் பச்சை வாடை பச்சை வாடை போகும் வரை நன்றாக வதக்கி எடுத்துக்கொண்டு.
  • கிரேவியும், எண்ணையும் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி கொத்தமல்லி தூவி விடுங்கள் இப்பொழுது சுவையான இறால் கிரேவி தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 4g | Protein: 4.6g | Cholesterol: 43mg | Sodium: 49mg | Potassium: 40mg | Calcium: 8.6mg
- Advertisement -

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here