Home ஆன்மிகம் புத்தர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இந்த இடத்தில் மட்டும் வைத்து வழிபடாதீர்கள்!

புத்தர் சிலையை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் இந்த இடத்தில் மட்டும் வைத்து வழிபடாதீர்கள்!

இந்தியர்களில் இந்துக்கள் தெய்வ வழிபாட்டில் பலவிதமான நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் வைக்கிறார்கள். நம் வீட்டில் கடன் பிரச்சினைகள் பண பிரச்சினைகள் வருவது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். அந்த பண பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாமும் பல தெய்வ வழிபாடு செய்திருப்போம் பல பரிகாரங்களும் செய்திருப்போம். ஆனால் புத்தர் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் பணப் பிரச்சனை தீர்ந்து போகும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக அனைவருமே வீடுகளில் சில தெய்வ சிலைகளை வைத்து பூஜை செய்து வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் தெய்வ சிலைகளோடு சேர்த்து புத்தர் சிலை குபேர சிலை என பல சிலைகளை வீட்டில் வைப்பார்கள். ஆனால் வீட்டில் வரும் கடன் பிரச்சினைகளுக்கு புத்தர் சிலையை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது என்று கூறப்படுகிறது. புத்தர் சிலையை வீட்டில் வைப்பது வீட்டிற்கு அமைதியையும் கடன் இல்லாத வாழ்க்கையையும் வீட்டிற்கு கலையையும் நேர்மறையான ஆற்றலையும் கொண்டுவரும். இந்த புத்தர் சிலையை நாம் வீட்டில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

புத்தர் சிலையை வைக்க வேண்டிய இடம்

வீட்டிற்கு கலையையும் நேர்மறை ஆற்றலையும் கொடுக்கக்கூடிய புத்தர் சிலையை வீட்டின் மையப் புள்ளியான நுழைவு வாயிலில் உள்ள ஏதேனும் ஒரு இடத்தில் வைக்க வேண்டும். வெளிச்சம் நன்றாக இருக்கும் இடத்தில் புத்தர் சிலையை வைப்பது மிகவும் நல்லது.

புத்தர் சிலையை வைக்க வேண்டிய திசை

வீட்டிற்கு நேர்மறை ஆற்றலையும் மன நிம்மதியையும் தரக்கூடிய புத்தர் சிலையை சூரியன் உதிக்கும் திசையான கிழக்கு திசையில் தான் வைக்க வேண்டும். சூரிய திசையான இந்த கிழக்கு திசையில் வைத்தால் நமக்கு ஏராளமான நன்மைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு வேலை கிழக்கு திசை நோக்கி வைக்க முடியாவிட்டால் வடக்கு திசை நோக்கி புத்தர் சிலையை வைக்க வேண்டும் அது வீட்டிற்கு செழிப்பையும் கடன் இல்லாத வாழ்க்கையையும் கொடுக்கும். வீட்டில் தோட்டங்கள் இருந்தால் தோட்டத்தின் வலது மூலையில் தியானம் மேற்கொள்ளும் இடங்களில் ஏதாவது ஒன்றின் மேல் வைத்தால் அதை பார்க்கும் பொழுதெல்லாம் நம் மனதிற்கு அமைதியாக இருக்கும்.

பூஜை அறையில் புத்தர் சிலை

புத்தர் சிலையை பூஜை அறையில் வைக்கலாமா வேண்டாமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கும். ஒருவேளை நாம் புத்தர் சிலையை பூஜை அறையில் வைப்பதாக இருந்தால் மற்ற தெய்வ சிலைகளுக்கு நடுவில் புத்தர் சிலையை மறைக்கும்படி வைக்கவே கூடாது. மற்ற சிலைகளோடு சேர்ந்த புத்தர் சிலையும் நன்றாக தெரியும் படி தான் வைக்க வேண்டும்.

புத்தர் சிலையை வைக்க கூடாத இடங்கள்

புத்தர் சிலையை குளியலறை படுக்கையறை மற்றும் சமையல் அறையில் ஒருபோதும் வைக்க கூடாது அது எதிர்மறை ஆற்றலை நமக்கு கொடுக்கும்.

-விளம்பரம்-

வீட்டில் உள்ள கதவு ஜன்னல் போன்றவற்றிற்கு எதிராக புத்தர் சிலையை எப்பொழுதுமே வைக்க கூடாது அது வீட்டிற்குள் வரும் நேர்மறை ஆற்றலை திருப்பி அனுப்பக்கூடும்.

புத்தர் சிலையை கீழே அல்லது தரையிலோ அல்லது மரச்சாமான்களிலோ வைக்க கூடாது. ஏனென்றால் புத்தர் சிலை எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்கு மதிப்பு அதிகரிக்கும் எனவே நாம் இடத்தை பார்த்து தான் புத்தர் சிலையை வைக்க வேண்டும்.

இதனையும் படியுங்கள் : வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!

-விளம்பரம்-