Home சைவம் வீட்டிலயே சுட சுட ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான புதினா டிக்கி இப்படி செய்து பாருங்க!

வீட்டிலயே சுட சுட ஸ்நாக்ஸ் சாப்பிட ருசியான புதினா டிக்கி இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் கேக்குறது எப்பவுமே ஸ்னாக்ஸ் தான் அவங்களுக்கு டெய்லி என்ன ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்கிறது அப்படின்னு நம்ம யோசிச்சுக்கிட்டே இருப்போம். என்ன சமைக்கிறதுன்னு கூட நம்ம முடிவு பண்ணிடலாம் ஆனா என்ன ஸ்நாக்ஸ் செய்றது அப்படின்னு முடிவு பண்றது ரொம்பவே கஷ்டம் ஏன் அப்படின்னா குழந்தைகளுக்கு புடிச்ச மாதிரி ஏதாவது ஒன்னு செஞ்சு கொடுக்கணும் அப்படின்னு நினைப்போம்.

-விளம்பரம்-

அந்த வகையில இன்னைக்கு ரொம்பவே ஹெல்தியான ஒரு புதினா வச்சு சூப்பரான சுவையில ரொம்பவே சட்டுனு ஒரு புதினா டிக்கி தான் எப்படி செய்யறதுன்னு பாக்க போறோம்.

இந்த புதினா டிக்கி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும் இதை ஸ்னாக்ஸாவும் செஞ்சு கொடுக்கலாம் இல்ல அப்படின்னா புலாவ் , பிரிஞ்சி ரைஸ்  அப்படின்னு இந்த மாதிரியான சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம தயிர் சாதத்துக்கு இந்த புதினா டிக்கி வச்சு சாப்பிட்டா ரொம்பவே அருமையான காம்பினேஷனா இருக்கும்.

ரொம்பவே கம்மியான பொருட்கள் வச்சு சீக்கிரமா செய்ய குடிக்க இந்த புதினா டிக்கி ஒரு தடவ நீங்க வீட்ல செஞ்சு கொடுத்தா போதும் குழந்தைங்க அடிக்கடி உங்களை செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. ஈவினிங் ஸ்கூல்ல இருந்து வந்து அடம் பிடிக்கிற குழந்தைகளுக்கு இந்த புதினா டிக்கி  செஞ்சு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டேஸ்டியான புதினா டிக்கி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
No ratings yet

புதினா டிக்கி | Pudhina Tikki Recipe In Tamil

புதினா டிக்கி சாப்பிடுவதற்கு ரொம்பவே ருசியா இருக்கும் இதை ஸ்னாக்ஸாவும் செஞ்சு கொடுக்கலாம் இல்ல அப்படின்னா புலாவ் , பிரிஞ்சி ரைஸ்  அப்படின்னு இந்த மாதிரியான சாப்பாட்டுக்கு சைட் டிஷ்ஷாவும் சாப்பிடலாம் அது மட்டும் இல்லாம தயிர் சாதத்துக்கு இந்த புதினா டிக்கி வச்சு சாப்பிட்டா ரொம்பவே அருமையான காம்பினேஷனா இருக்கும்.ரொம்பவே கம்மியான பொருட்கள் வச்சு சீக்கிரமா செய்ய குடிக்க இந்த புதினா டிக்கி ஒரு தடவ நீங்க வீட்ல செஞ்சு கொடுத்தா போதும் குழந்தைங்க அடிக்கடி உங்களை செஞ்சு தர சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க.
Prep Time1 hour 10 minutes
Active Time20 minutes
Total Time1 hour 30 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Pudhina Tikki
Yield: 4
Calories: 272kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 1/4 கப் துவரம் பருப்பு
  • 1/4 கப் புதினா
  • 2 ஸ்பூன்  இஞ்சி
  • 2 ஸ்பூன்  பச்சை மிளகாய்
  • 5 உப்பு பிரெட்
  • 1/4 கிராம்  பன்னீர்
  • உப்பு தேவையான அளவு
  • 3 ஸ்பூன்  எண்ணெய்

செய்முறை

  • புதினாவை பொடியாக நறுக்கவும்.
  • பருப்பை சுத்தம் செய்து, முதல் நாள் இரவு ஊற விடவும்.
  • மறுநாள் நீரை வடித்து விட்டு, வேக வைக்க வேண்டும் (குழைய விட வேண்டாம்
  • பிறகு கரண்டியால் மசிக்கவும்.
  • எல்லா சாமான்களையும் சேர்த்து, நன்றாகப் பிசைந்து, வடை போல் தட்டி, தோசைக் கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் போட்டு இருபுறமும் சிவப்பாக ஆகும் வரை சுட்டு எடுக்கவும்.
  • சூடாகப் பரிமாறவும்.

Nutrition

Serving: 200g | Calories: 272kcal | Carbohydrates: 214.3g | Protein: 5.5g | Sodium: 38mg | Potassium: 263mg | Vitamin A: 51IU | Vitamin C: 46mg | Calcium: 65mg | Iron: 1mg

இதையும் படியுங்கள் : ருசியான ப்ரோக்கோலி டிக்கா இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே தனி தான்!

-விளம்பரம்-