Home ஸ்வீட்ஸ் கல்யாண வீடுகளில் செய்யப்படும் பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே சில நிமிடத்தில் இப்படி...

கல்யாண வீடுகளில் செய்யப்படும் பூசணி அல்வா தளதளன்னு ரொம்ப சுவையா வீட்டிலேயே சில நிமிடத்தில் இப்படி செய்யலாம்!

பூசணிக்காயில் நிறையவே சத்துக்கள் உண்டு. குறிப்பாக பெண்களுக்கு வரக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கும் இந்த பூசணிக்காயை இப்படி அல்வா செஞ்சி பாருங்க, பூசணிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க மிகவும் உதவும். புண்களை ஆற்ற, தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் மட்டுமல்ல அட்டகாசமான சுவையையும் கொடுக்கும். இப்படி மட்டும் செஞ்சா நாவில் கரைந்து நாவும், மனமும் இனிக்கும்..

-விளம்பரம்-

கல்யாண வீட்டு இனிக்கிற தளதள பூசணிக்காய் அல்வா வீட்டிலேயே அருமையாக செய்யலாம். அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலி அல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு இந்த அல்வா ஃபேமஸ்.

அதே போல் தான் பூசணிக்காயை வைத்து செய்யும் இந்த அல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல் இல்லாமல், இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு இப்படி ஒரு சுலபமான , சுவையான பூசணிக்காய் அல்வா ரெசிபியை எப்படி செய்வது தெரிந்து கொள்ள தான் இந்த பதிவு.

Print
5 from 1 vote

பூசணிக்காய் அல்வா | Pumpkin Halwa Recipe In Tamil

கல்யாண வீட்டு இனிக்கிற தளதள பூசணிக்காய் அல்வாவீட்டிலேயே அருமையாக செய்யலாம். அல்வா என்றதுமே பலருக்கும் ஞாபகத்திற்கு வருவது திருநெல்வேலிஅல்வா தான். திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா என்றால் தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள்.அந்த அளவிற்கு இந்த அல்வா ஃபேமஸ். அதே போல் தான் பூசணிக்காயை வைத்து செய்யும் இந்தஅல்வாவும் இதன் சுவை பிரமாதமாக இருக்கும். அது மட்டும் இன்றி மற்ற அல்வாக்களை போல்இல்லாமல், இதை செய்வது மிக மிக சுலபம் செலவும் மிகக் குறைவு, நேரமும் குறைவு இப்படிஒரு சுலபமான , சுவையான பூசணிக்காய் அல்வா ரெசிபியை எப்படி செய்வது தெரிந்து கொள்ள தான்இந்த பதிவு.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Dessert
Cuisine: tamil nadu
Keyword: Pumpkim Halwa
Yield: 4
Calories: 58kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கிலோ பூசணிக்காய்
  • 1/2 கிலோ சர்க்கரை
  • 1/4 லிட்டர் பால்
  • 100 மி.லி நெய்
  • 6 முந்திரி
  • 3 ஏலக்காய்

செய்முறை

  • பூசணிக்காயைத்தோல் சீவித் துருவிக் கொள்ளவும். முந்திரியை உடைத்து இரண்டு ஸ்பூன் நெய் விட்டுபொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
     
  • ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைக்கவும். பால் நன்கு கொதிக்கும்போது பூசணிக்காயைப் போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.
  • பூசணிக்காய் பாதி வேகும் போது மெதுவாக கிளறிவிடவும். நன்றாக வெந்து குழைந்து வரும்போது தேவையான அளவிற்கு சர்க்கரையை போட்டு நன்கு கலக்கி விடவும்.
  • சர்க்கரையை போட்டதும் அடிப்பிடித்துக் கொள்ளாதவாறு அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
  • பின்னர் நெய்யைச் சிறிது சிறிதாக ஊற்றி கிளற வேண்டும். அதனுடன் வறுத்த முந்தரியை போட்டுக் கிளறவும். சுவையான அல்வா ரெடி..

Nutrition

Serving: 300g | Calories: 58kcal | Carbohydrates: 13g | Protein: 22.2g | Fat: 0.2g | Sodium: 78mg | Potassium: 325mg | Fiber: 3.8g | Vitamin C: 3.8mg | Calcium: 16mg | Iron: 0.8mg