பரங்கிக்காய் கூட்டு பத்து நிமிஷத்துல இப்படி செஞ்சா ஒரு தட்டு சோறும் மொத்தமும் காலியாகிவிடும்!

- Advertisement -

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான் பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாக இருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம். இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நலம் தரும் பரங்கிக்காய் பால் கூட்டு பத்து நிமிஷத்தில் சுவையாக செய்யலாம்.

-விளம்பரம்-

பரங்கிக்காய்  செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. …கொஞ்சம் வித்தியாசமாக மதிய சமையலுக்கு பரங்கிக்காய் சேர்த்து பாரம்பரியமாக செய்யப்படும் பரங்கிக்காய் பால் கூட்டு ருசித்து பாருங்களேன். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
1 from 1 vote

பரங்கிக்காய் பால் கூட்டு | Pumpkin Kootu

மஞ்சள் நிறத்தில் இருக்கும் பூசணிக்காயை தான்பரங்கிக்காய் என்று கூறுவார்கள். இது மிகவும் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இனிப்பாகஇருப்பதால் இதை சர்க்கரைப் பூசணி என்று கூறுவார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் ஏராளம்.இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் ஆரோக்கியம் அதிகரிக்கும். நலம் தரும்பரங்கிக்காய் பால் கூட்டு பத்து நிமிஷத்தில் சுவையாக செய்யலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Pumpkin Kootu
Yield: 4
Calories: 130kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பரங்கிக்காய்
  • 1 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • 2 காய்ந்த மிளகாய்
  • 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 1 கப் காய்ச்சிய பால்
  • 1 டேபிள்ஸ்பூன் வெல்லம்
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • பரங்கிக்காயை ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும். உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு இவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, தேங்காய் சேர்த்து அரைக்கவும்.
  • காய் விழுதையும் வெந்தவுடன், அரைத்த உப்பையும் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும்.
  • வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் நீர் விட்டுக் கரைத்து, அந்தத் தண்ணீரையும் கூட்டில் சேர்க்கவும்.
  • கொதித்ததும் இறக்கி, பால் சேர்க்கவும். இனிப்பான இந்தக் கூட்டு, சாப்பிட்ட அனைவரையும் கவர்ந்திழுக்கும்.

Nutrition

Serving: 800g | Calories: 130kcal | Carbohydrates: 21g | Protein: 13g | Potassium: 327mg | Fiber: 2.8g | Calcium: 52mg