ருசியான பரங்கிக்காய் சூப்‌ இப்படி செய்து பாருங்க ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்துள்ள சூப்!!

- Advertisement -

சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த ருசியான கார்ன் சூப் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

ஆனால் அசைவம் உண்ணாதவர்கள் மத்தியில் வெஜிடபிள் மற்றும் மஷ்ரூம் சூப்பே டாப் சாய்ஸ் ஆக இருக்கிறது. சூப்கள் ருசியானவை மட்டுமல்ல, செய்வதற்கு எளிதானவை கூட. ஆரோக்கியமான உணவை நீங்கள் எப்போதும் விரும்பினால், இந்த பரங்கிக்காய் சூப் செய்து கொடுங்கள். இது தயாரிக்க 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும். காய்கறிகளை உண்ண அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு சூப்பில் இந்த பரங்கிக்காயை சேர்த்து வெகு சுலபமாக செய்து கொடுத்து விடலாம்.

Print
No ratings yet

பரங்கிக்காய் சூப்‌ | Pumpkin Soup

சூப்புகள் பெரும்பாலானோரால் விரும்பப்படும் ஒரு உணவு. இவை பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவராலும் உண்ணக்கூடிய ஒரு உணவு வகை. சூப்புகளில் பல வகையுண்டு சிக்கன் சூப், மட்டன் சூப், வெஜிடபிள் சூப், மஷ்ரூம் சூப், தக்காளி சூப். என்ன தான் இத்தனை சூப் வகைகள் இருந்தாலும் சூப்புகளில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது ஆட்டு கால் சூப் தான். அதற்கென ஒரு தனி கூட்டமே உண்டு. ஆனால் அசைவம் உண்ணாதவர்கள் மத்தியில் வெஜிடபிள் மற்றும் மஷ்ரூம் சூப்பே டாப் சாய்ஸ் ஆக இருக்கிறது. சூப்கள் ருசியானவை மட்டுமல்ல, செய்வதற்கு எளிதானவை கூட.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening
Cuisine: Indian
Keyword: soup
Yield: 3 People
Calories: 49kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 துண்டு பரங்கிக்காய்
  • 1 கப் சின்ன
  • 4 பல் பூண்டு
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் வெண்ணெய்
  • 1 டேபிள் ஸ்பூன் காய்ச்சிய பால்

செய்முறை

  • பரங்கிக்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிறிய வெங்காயத்தை நைசாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.
  • வேகவைத்த பரங்கிக்காய் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • இப்பொழுது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த விழுதை பச்சை வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • இப்பொழுது மிளகு பொடி, உப்பு, பால் சேர்த்து லேசாக கொதிக்க வைக்கவும்.
  • ஒரு சிறிய கடாயில் வெண்ணெய் போட்டு பூண்டு, நறுக்கிய சிறிய வெங்காயம் நன்றாக வதக்கி சூப்பில் போடவும்.
  • இது சூடாக அருந்தினால் சுவையாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 49kcal | Carbohydrates: 12g | Protein: 1.8g | Fat: 0.17g | Potassium: 340mg | Fiber: 2.7g | Vitamin A: 784IU | Vitamin C: 9mg | Calcium: 21mg | Iron: 0.8mg