Home ஆன்மிகம் கோடி புண்ணியம் தரும் புராட்டாசி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது ?

கோடி புண்ணியம் தரும் புராட்டாசி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது ?

தமிழ் மாதங்களில் ஆறாவது மாதமாக வரும் மாதம் புரட்டாசி. புரட்டாசி மாதம் என்றாலே திருப்பதி வெங்கட மலையானுக்கு விரதம் இருப்பதும், அசைவை உணவை தவிர்க்க வேண்டும் என்பது மட்டுமே அனைவரின் நினைவிலும் வரும். ஆனால் புரட்டாசி மாதத்திற்கு என்னென்ன சிறப்புகள் இருக்கிறது. என்னென்ன சுப காரியங்கள் செய்யலாம், என்னென்ன சுப காரியங்கள் செய்யக்கூடாது என்று வரைமுறைகள் இருப்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

-விளம்பரம்-

புரட்டாசி மாதத்தில் ஆன்மீகம் அதிக அளவில் ஓங்கியும், முன்னோர்களின் ஆசிகளை பெறுவதும் மிக முக்கியமான நிகழ்வாக இருக்கிறது. இந்த வழக்கத்தினால் புரட்டாசி மாதம் புனிதத்துவம் அடைகிறது. இறைவனின் அருளும் முன்னோர்களின் ஆசியும் ஒருங்கே கிடைப்பதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் . ஆகையால் புரட்டாசி மாதத்தில் இறைவனின் அருளும் முன்னோர்களின் ஆசியும் கிடைப்பது மிகப்பெரிய வரமாக இருக்கிறது. இதனால் புரட்டாசி மாதம் புனிதமாகிறது. வெயில் காலம் முடிந்து மழைக்காலம் துவங்குவதற்கான அறிகுறிகள் இந்த புரட்டாசி மாதத்தில் தான் தெரிகிறது. ஆகையால் புரட்டாசி மாதத்தில் ஆன்மீக காரியங்களுக்கு, அறிவியல் பூர்வமான காரணங்களும் இருக்கின்றது. இம்மாதத்தை அறிவியல் மாதம் என்று கூறலாமா? அல்லது ஆன்மீக மாதம் என்று கூறலாமா? குழப்பம் தான் ஆன்மீகமும் , அறிவியலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகையால் இம்மாதம் ஆன்மீக அறிவியல் மாதமாகிறது.

ஆன்மீக மாதம் புரட்டாசி?

புரட்டாசி மாதம் வேங்கட மலையானுக்கு மிகவும் உகந்த மாதம். காரணம் புரட்டாசி மாதத்தில் தான் கன்னி ராசிக்கு சூரிய பகவான் நகர்கிறார். இந்த காலத்தில் அசைவ உணவை தவிர்த்து இறைவனை தியானித்து இறைபக்தியில் நாம் மூழ்கி இருப்பதால் இம்மாதத்தை ஆன்மீக மாதம் என்று கூறுகிறோம். இந்த மாதத்தை மகாளய பட்சம் என்று கூறுகிறார்கள். அதாவது இறந்த நம் முன்னோர்கள் பூமிக்கு வருவார்களாம். அவர்களின் மனம் திருப்தி அடைய அவர்களுக்கு  அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து அவர்கள் மனதை திருப்திப்படுத்தி அவர்களிடம் இருந்து ஆசியை பெறுவதற்கும் இம்மாதம் உகந்தது. முன்னோர்களின் ஆசி கிடைக்காமல் பலர் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையாமல் தடைபட்டுக் கொண்டே இருக்கும். அப்படி உள்ளவர்கள் இந்த புரட்டாசி மாதம் அமாவாசை அன்று நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசியை பெற்று கொள்ளலாம்.

அறிவியல் மாதம் புரட்டாசி?

அறிவியல் மாதம் புரட்டாசி என்று கூறுவதற்கான காரணம் இந்த புரட்டாசி மாதத்தில் தான் வெயிலின் தாக்கம் குறைந்து மழை பொழிவு துவங்க ஆரம்பிக்கிறது. இதுவரை வெயிலை கிரகத்துக் கொண்டிருந்த பூமி மழை பொழிந்த உடன் தன்னை குளிர்ச்சி படுத்திக் கொள்வதற்காக நீரை உறிஞ்சி தன்னில் உள்ள வெப்பத்தை வெளியேற்ம். அப்படி வெப்பம் வெளியேறும் பொழுது சீதோசன நிலை மாற்றத்தினால் நமக்கு காய்ச்சல் சில கிருமிகளின் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆகையால் இந்த காலங்களில் நாம் அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டால் சீதோசன நிலை மாற்றத்தினால் நமக்கு உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதனால் அசைவ உணவுகள் என்றாலே அவை சூடான உணவுகள் ஏற்கனவே நமக்கு உடல் நிலையில் சீதோஷணம் சரியில்லாமல் வெப்பமாக இருக்கும். இந்த காரணத்தினால் அசைவ உணவு உட்கொண்டால் மேற்கொண்டு உடல் சூடாகும் என்பதற்காகவும், வயிற்று உபாதைகள் வரும் என்பதற்காகவும் நம் முன்னோர்கள் அறிவியல் பூர்வமாக புரட்டாசி மாதத்தில் விரதம் இருக்க வேண்டும். அசைவ உணவை தவிர்த்து விரதம் இருக்க வேண்டும் என்று அறிவியலை ஆன்மீகத்தில் புகுத்தி இருக்கிறார்கள். நம் முன்னோர்கள் எப்பொழுதுமே ஒரு ஆன்மீக செய்தி கூறினார்கள் என்றால் அதில் அறிவியல் பூர்வமான விஷயம் நிச்சயமாக இருக்கும்.

புரட்டாசி மாதம் செய்யகூடியவைகள்?

புரட்டாசி மாதத்தில் தான் விஜயதசமி வருகிறது அந்த விஜயதசமியில் பிள்ளைகளுக்கு முதல் முதலில் கல்வி கற்றுக் கொடுக்கத் தொடங்கினால் அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

-விளம்பரம்-

கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யலாம்.

அறுபதாவது கல்யாணம் 80 வது கல்யாணம் செய்வதற்கும் இந்த மாதிரி உகந்தது.

இல்லங்களில் பூஜைகள் செய்வதற்கும் முன்னோர்களுக்கு தில ஹோமம் செய்வதற்கும் இந்த மாதம் உகந்தது.

-விளம்பரம்-

புதிய தொழில் தொடங்கலாம் அது மேலும் மேலும் வளரும்.

குழந்தைகளுக்கு மொட்டை அடித்து காது குத்துதல் செய்யலாம்.

புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கு இந்த மாதம் உகந்தது.

புரட்டாசி மாதம் செய்யக்கூடாதவை?

இந்த மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.

புது வீடு கட்டுவதற்கு வாஸ்து செய்யக்கூடாது.

புது வீடு வாங்குவது, பால் காய்ச்சி குடி செல்ழதுக் கூடாது. அது சொந்த வீடாக இருந்தாலும் அல்லது வாடகை வீடாக இருந்தால் கூட புது வீட்டில் பால் காய்ச்சி குடி புக கூடாது.

புரட்டாசி மாதத்தில் ஆன்மீக மேலோங்கி இருப்பதாலும் முன்னோர்களின் ஆசிகளும் மேலோங்கி இருப்பதாலும் புரட்டாசி மாதம் மனநிறைவையும், மகிழ்ச்சியையும் கொடுக்கக்கூடிய மாதமாக இருக்கிறது .

ஆகையால் புரட்டாசி மாதம் புனிதமான மாதமாக இருக்கிறது. இந்த புனிதமான புரட்டாசி மாதத்தில் முன்னோர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று அனைவரும் மகிழ்வோடு இருபபோம்.

இதனையும் படியுங்கள் : வளமான வாழ்வு தரும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் பற்றி உங்களுக்கு தெரியுமா ?