காரசாரமான ருசியில் பஞ்சாப் சிக்கன் மிளகு கிரேவி ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கிரேவி செஞ்சு சாப்பிடுங்களேன். சிக்கன் கிரேவி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்கு தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக பஞ்சாபி ஸ்டைலில் செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் இது. பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிட கூடிய வகையில் இருக்கும்.

-விளம்பரம்-

அந்த வகையில் பஞ்சாபி முறையில் சிக்கன் வைத்து இது போன்று கிரேவி செய்து பாருங்க. வீட்டில் உள்ளவர்களெல்லாம் அசந்து போய்டுவாங்க. அப்புறம் இந்த சிக்கன் கிரேவியும் காலியாகிவிடும், சோறும் காலியாகி விடும். இந்த சிக்கன் கிரேவி செய்வது மிகவும் சுலபமாக இருப்பதோடு, பூரி, சப்பாத்திக்கு அட்டகாசமாகவும் இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாகவும் இருக்கும். சிக்கன் என்றாலே அனைவருக்கும் மிகவும் விருப்பமான ஒரு அசைவ வகை ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த பஞ்சாபி சுவையில் சிக்கன் கிரேவி இப்படி ஒருமுறை செய்து கொடுத்து பாருங்கள், அடிக்கடி கேட்டு அடம் பிடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

- Advertisement -
Print
4.50 from 2 votes

பஞ்சாப் சிக்கன் மிளகு கிரேவி | Punjab Chicken Pepper Gravy Recipe In Tamil

ஞாயிற்றுக்கிழமை வந்துட்டாலே, பலருக்கும் ஜாலியாக இருக்கும். ஏன்னா நமக்கு பிடிச்ச மாதிரி சமைச்சு, அதை எவ்வளவு நேரம் வேணாலும் பொறுமையா ருசிச்சு சாப்பிடலாம். இந்த சன்டே என்ன சமைக்குறதுன்னு தெரியலையா? சிக்கன் வாங்கிட்டு வந்துருக்கீங்களா? அப்படின்னா அதை வெச்சு பஞ்சாபி ஸ்டைல் சிக்கன் கிரேவி செஞ்சு சாப்பிடுங்களேன். சிக்கன் கிரேவி எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்கு தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக பஞ்சாபி ஸ்டைலில் செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபி தான் இது. பொதுவாக பஞ்சாபி சமையல் என்றாலே அது தனி சுவைத்தான். பஞ்சாபி தாபா என்றாலே மிகவும் பிரபலமான ஒன்று. ஏனென்றால் அங்கு சமைக்கப்படும் உணவுகள் மிகவும் சுவையாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Punjab Chicken Pepper Gravy
Yield: 4 People
Calories: 99kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கி சிக்கன்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • 1 டீஸ்பூன் காஷ்மீர் மிளகாய்த்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/4 கப் தயிர்
  • 2 பச்சை மிளகாய்
  • 2 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் தக்காளி விழுது
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • பின் சிக்கனுடன் உப்பு, மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து‌ எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, பிரியாணி இலை சேர்த்து பின் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி விழுது சேர்த்து வதக்கவும். பின் மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், மல்லித் தூள், சீரகத்தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு நாம் ஊற வைத்துள்ள சிக்கன் சேர்த்து வதக்கி பின் பட்டர் சேர்த்து நன்கு கலந்து மூடி போட்டு வேக விடவும்.
  • பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தீயை குறைத்து வைத்து வேகவிடவும். சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை, கஸ்தூரி மேத்தி, மிளகு தூள் தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான பஞ்சாபி சிக்கன் கறி தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 99kcal | Carbohydrates: 13g | Protein: 9.4g | Fat: 2.79g | Sodium: 88mg | Potassium: 95mg | Fiber: 1.27g | Vitamin A: 295IU | Vitamin C: 606mg | Calcium: 24mg | Iron: 21mg

இதனையும் படியுங்கள் : பூரி, சப்பாத்திக்கு இனி பஞ்சாபி ஆலு மேத்தி இப்படி செய்து பாருங்க! 2 பூரி அதிகமாவே சாப்பிடுவாங்க!