இட்லி தோசைக்கு ஏற்ற காரசாரமான பஞ்சாபி காலா சென்னா இப்படி செய்து கொடுங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்!

- Advertisement -

கொண்டைக்கடலை வைத்து ரொம்ப சுவையான ஒரு ரெசிபி பண்ண இருக்கோம். இந்த பஞ்சாபி ஸ்டைல்ல கொண்டக்கடலை வைத்து இந்த காலா சென்னா மசாலா எப்படி பண்றது அப்படின்னு பார்க்க இருக்கோம். கொண்டைக்கடலையை வைத்து நாம் நிறைய உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்போம்.  கொண்டைக்கடலையில் அந்த அளவுக்கு புரத`மும், நார்ச்சத்து நிறையவே இருக்கு.

-விளம்பரம்-

தானிய வகைகளில் கொண்டக்கடலை ரொம்பவே உடலுக்கு நல்லது கொடுக்கக்கூடிய ஒரு தானியமாகும். இந்த கருப்பு கொண்டைக்கடலையை ஊற வச்சு முளை கட்ட வச்சு அப்படியே கூட சாப்பிடலாம் அது உடலுக்கு ரொம்பவே நல்லது. முளைகட்டின பயிர்கள் சாப்பிடுவது உடலுக்கு அதிக அளவு உயிர் சத்துள்ள ஊட்டச்சத்துக்களை கொடுக்கும். இந்த கொண்டைக்கடலையை ஊற வெச்சு நம்ம  சுண்டல் செய்து சாப்பிடும்போது கூட அப்படியே அதில் இருக்கிற புரதம் நமக்கு கிடைக்குது. அப்படி  கருப்பு கொண்டைக்கடலையில்   குழம்பு வச்சு சாப்பிட்டிருப்போம்.

- Advertisement -

சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்கு இட்லிக்கும் சட்னி செய்யறதுக்கு நேரத்துல சட்டுனு ஒரு கொண்டக்கடலை சென்னா மசாலா எப்படி செய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம். இந்த கருப்பு கொண்ட கடலையை வச்சு ஈஸியா இப்படி சொன்னா மசாலா செய்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும் இது நம்ம பஞ்சாபி ஸ்டைல பண்ண போறோம் இந்த பஞ்சாபி ஸ்டைல் காலா சென்னா எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

பஞ்சாபி காலா சென்னா | Punjabi Kaala Channa In Tamil

சுண்டல் செய்து சாப்பிட்டிருப்போம். ஏன் வடை கூட தட்டி சாப்பிட்டு இருப்போம் அதே மாதிரி ஒரு தோசைக்குஇட்லிக்கும் சட்னி செய்யறதுக்கு நேரத்துல சட்டுனு ஒரு கொண்டக்கடலை சென்னா மசாலா எப்படிசெய்யறது அப்படின்னு தான் பார்க்க இருக்கோம். இந்த கருப்பு கொண்ட கடலையை வச்சு ஈஸியாஇப்படி சொன்னா மசாலா செய்து கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். அதுவும்இது நம்ம பஞ்சாபி ஸ்டைல பண்ண போறோம் இந்த பஞ்சாபி ஸ்டைல் காலா சென்னா எப்படி செய்யறதுன்னுபார்க்கலாம்.
 
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: Breakfast, dinner
Cuisine: punjabi
Keyword: Punjabi Kaala Channa
Yield: 4
Calories: 200kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கொண்டைக்கடலை
  • 1 தக்காளி
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 1 ஸ்பூன் மல்லிதூள்
  • 1/4 ஸ்பூன் சீரகதூள்
  • 1/4 ஸ்பூன் கரமசாலா
  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 2 பச்சைமிளகாய்
  • 1 பிரியாணி இலை
  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் கஸ்தூரி மேத்தி
  • கொத்தமல்லி சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கருப்பு கொண்டைக்கடலையை கழுவிட்டு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளி பழத்தை சேர்த்து அதை விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம்,கடுகு சேர்த்துதாளிக்கவும்.
  • பிறகு ஒரு சின்ன பாத்திரத்தில் மிளகாய் தூள், மல்லித்தூள்,மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாககலந்து வைத்துக் கொள்ளவும்
  • இந்த மசாலா கலவையை  தாளித்து வைத்துள்ள கடாயில் சேர்த்துகலந்து விட வேண்டும்.அப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு கலந்து கொள்ள வேண்டும்.கலந்து விட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக கலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் விழுதாக அரைத்து வைத்துள்ள தக்காளி பழத்தை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
  • இப்பொழுது பச்சை வாசனை சென்ற பிறகு அதில் வேக வைத்து எடுத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாககலந்து விட வேண்டும்.
  • பிறகு அதில் பச்சை மிளகாய், பிரியாணி இலை, உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
  •  கஸ்தூரி மேத்தி கசக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் பின்பு நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான பஞ்சாபி காலாசென்னா தயார்.
  •  இது இட்லி, தோசை , பூரி,  சப்பாத்தி அனைத்திற்குமே  சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
     

Nutrition

Serving: 100g | Calories: 200kcal | Carbohydrates: 67g | Protein: 13g | Sodium: 13mg | Potassium: 274mg | Fiber: 6g

இதையும் படியுங்கள் : குடைமிளகாய் சென்னா மசாலாவை ஒரு முறை இப்படி வீட்டில் செய்து பாருங்கள், அவ்வளவு!