Home ஆன்மிகம் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த வழிபாட்டை எந்த காரணம் கொண்டும் தவற விடாதீர்கள்!

இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை இந்த வழிபாட்டை எந்த காரணம் கொண்டும் தவற விடாதீர்கள்!

வருடத்தில் புரட்டாசி மற்றும் மார்கழி ஆகிய மாதங்கள் பெருமாள் வழிபாட்டிற்குரிய மாதங்களாக கருதப்படுகின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமையில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டால் சனிதோஷம் விலகும். புரட்டாசி சனியில் பெருமாளுக்கு மாவிளக்கு படைத்து வழிபடும் முறையும் நம்முடைய வழக்கத்தில் உள்ளது. புரட்டாசி மாத விரதம், ஏகாதசி விரதத்திற்கு இணையாக சொல்லப்படும் விரத முறையாகும்.

-விளம்பரம்-

புரட்டாசி மாதம் பல்வேறு சிறப்புகள் கொண்டது. இந்த மாதத்தில் பெருமாளுக்கு மட்டுமன்று அம்பாளுக்கு உகந்த நவராத்திரி, சிவனருளைப் பெற்றுத் தரும் கேதாரி கௌரி விரதம் எனத் தெய்வங்களின் அருளாசியும், பித்ருக்களின் அருளாசியும் ஒருங்கிணைந்து கிடைப்பது மிகுந்த சிறப்பாகும். இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட்டு அவரது திருக்கோயில்களுக்குச் சென்று தரிசனம் பெறுவதால் சகல நலன்களும் கைகூடும்.

புரட்டாசி சனிக்கிழமை மகிமை

ஒரு மாதத்திற்கு சைவஉணவுகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும் பொழுது சாத்வீக எண்ணங்கள் அதாவது நல்ல எண்ணங்கள் மட்டுமே தோன்றுவதற்கான சாதகப் பலன்கள் ஏற்படுகின்றது. மேலும் தெய்வத்திற்கு விரதம் இருப்பதால் ஆன்மீகமும் அறிவியலும் சேர்ந்து நம் உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றன . மேலும் பக்தியோடு விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் வாழ்க்கையில் அனைத்து துன்பங்களும் விலகி நலம் யாவும் பெறுவோம். அந்த வகையில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையான இன்று மூன்று வழிபாடுகள் செய்வதன் மூலம் பெருமாளின் ஆசி கிடைப்பதோடு இல்வாழ்க்கையும் சிறக்கும்.

வழிபாடு 1

நம்மையே விளக்காகவும், தூய மனது நெய்யாகவும், அன்பை தீபமாகவும் அர்ப்பணிக்கும் ஒரு அபூர்வமான சக்தி வாய்ந்த வழிபாடு தான் இந்த மாவிளக்கு வழிபாடு. ஆண்டுக்கு ஒருமுறையாவது குலதெய்வம் கோவிலில் மாவிளக்கு வழிபாடு செய்ய வேண்டும். புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளுக்கு வீடுகளில் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். இத்துடன் இந்த எளிய வழிபாட்டையும் செய்து கொள்ளுங்கள்.

ஏலக்காய் மகாலட்சுமிக்கு உகந்த பொருளாக கருதப்படுகிறது. அதனால் இந்த வழிபாட்டிற்கு 2 ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜை அறையில் ஒரு அகல் விளக்கு தீபத்தை ஏற்றி இரண்டு ஏலக்காயை எடுத்து உங்கள் உள்ளங்கையில் வைத்து நன்றாக மூடிக் கொள்ளுங்கள். ஏலக்காயை உங்கள் கைகளில் வைத்துக் கொண்டே ஒரு முறை வீட்டை சுற்றி வாருங்கள். இப்படி சுற்றும் போதே உங்களுடைய பணத்தேவைகள் அனைத்தும் நிறைவேற வேண்டி கொள்ளுங்கள்.

-விளம்பரம்-

பின்னர் உங்கள் உள்ளங்கையில் இருக்கும் ஏலக்காயை சிகப்பு துணியில் வைத்து விடுங்கள். பின்‌ இதனை ஒரு சிகப்பு நூல் வைத்து ஒரு மூட்டையாக கட்டி உங்கள் பூஜையறையில் 21 நாட்கள் வைத்துக் கொள்ளுங்கள். 21 நாட்கள் கழித்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இப்படி வழிபடுவதன் மூலம் உங்கள் வீட்டின் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வழிபாடு 2

செல்வ கடாட்சத்தை வாரி வழங்கும் வல்லமை கொண்டது துளசி. புனிதம் மிகுந்த துளசி இருக்கும் வீட்டில் ஐஸ்வர்யத்துக்கு ஒருபோதும் குறை இருக்காது. பெருமாளுக்கு உகந்த புரட்டாசியில் துளசி கொண்டு வழிபடுவதால் பலன்கள் பல மடங்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அதனால் சனிக்கிழமையான இன்று காலையில் கொஞ்சம் துளசி இலையை பறித்து வைத்து விடுங்கள். இன்று தூங்க செல்லும் முன் ஒரு சொம்பு நீரில் நீங்கள் பறித்த துளசியை போட்டு பெருமாள் படத்திற்கு அருகில் வைத்து விடுங்கள்.

அடுத்த நாள் எழுந்ததும் குளிப்பதற்கு முன் வீடு முழுவதும் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்தி வீட்டை சுற்றி இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் கண் திருஷ்டி போன்றவை எல்லாம் நீங்கும். அதுமட்டுமல்லாமல் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்குச் மாலையில் சென்று, பெருமாளுக்கு அர்ச்சனை செய்தும், துளசி மாலை சாத்தியும், துளசி தீர்த்தம் பருகியும் வேண்டிக்கொண்டால், நம் வீட்டில் தடைப்பட்டிருந்த மங்கல காரியங்கள் நிறைவேறும்.

-விளம்பரம்-

வழிபாடு 3

புரட்டாசி சனிக்கிழமையான இன்று விரதமிருந்து இன்று மாலை ஒரு அகல் விளக்கில் சுத்தமான பசு நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு அந்த தீபத்தில் ஆறு கற்கண்டுகளை சேர்த்து தீபம் ஏற்றி, இந்த தீபத்தை மகாலட்சுமி தாயார் படத்திற்கு முன்பாக ஏற்றி வையுங்கள். இப்படி செய்வதன் மூலம் உங்களுடைய அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து, பணவரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

பெருமாள் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம். அவரைப் பணிந்துகொண்டால் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் பெருகும். பெருமாளுக்கு இந்த மாதத்தில் செய்யும் மாவிளக்கு, தளிகை போடுதல், கோவிந்தாபோடுவது, சமாராதனை ஆகிய வழிபாடுகள் மிகவும் பலன்தருபவை. சகல தோஷங்களையும் நீக்கும் வழிபாடாக ஏழுமலையான் வழிபாடு விளங்குகிறது.

இதனையும் படியுங்கள் : கோடி புண்ணியம் தரும் புராட்டாசி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது ?