Home சைவம் ரொம்ப சீக்கிரத்துல டக்குனு இட்லி தோசை சாதத்துக்கு சேர்த்து சாப்பிடுற மாதிரி ஒரு அவசர பருப்பு...

ரொம்ப சீக்கிரத்துல டக்குனு இட்லி தோசை சாதத்துக்கு சேர்த்து சாப்பிடுற மாதிரி ஒரு அவசர பருப்பு குழம்பு செய்யலாம்!

பருப்பு குழம்புல எக்கச்சக்கமான வெரைட்டீஸ் இருக்கு. பிறந்த குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடியது பருப்பு குழம்பு தான். சுடு சாதத்தில் பருப்பு குழம்பு ஊத்தி மேல கொஞ்சமா நெய் ஊத்தி சாப்பிட்டா போதும் டேஸ்ட் செமையா இருக்கும். நீங்க எங்கேயாவது வெளியில் போயிட்டு வந்தீங்கன்னா டக்குனு இட்லி தோசை சாதத்துக்கு இப்ப நம்ம செய்யப் போற இந்த அவசர பருப்பு குழம்பு வச்சு சாப்பிடலாம்.

-விளம்பரம்-

பத்து நிமிஷத்துல டக்குனு இந்த பருப்பு குழம்பு நம்ம ரெடி பண்ணிடலாம். ரொம்ப சிம்பிளான பொருட்களை வைத்து சட்டுனு செய்யக்கூடிய இந்த பருப்பு குழம்பு சமையல் அறையில் உங்களுக்கு ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். ஆனா ரொம்ப சட்டுன்னு சீக்கிரத்துல செய்றதால இந்த பருப்பு குழம்பு நல்லா இருக்காதுன்னு மட்டும் நினைச்சுறாதீங்க டேஸ்ட்டும் ரொம்ப சூப்பரா இருக்கும்.

 நம்ம எப்படினாலும் பருப்பு குழம்பு சாப்பிட்டிருப்போம் ஆனால் இந்த பருப்பு குழம்பு இன்னும் ரொம்ப சுவையா மாறிடும். நீங்க சட்னி செய்வதற்கு கூட கொஞ்சம் லேட் ஆகும் ஆனா இந்த பருப்பு குழம்பு செய்ய ரொம்ப நேரம் ஆகவே ஆகாது ரொம்பவே சீக்கிரமா செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க சட்டுனு செய்யக்கூடிய இந்த பருப்பு குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
2 from 2 votes

அவசர பருப்பு குழம்பு | Quick paruppu kulambu In Tamil

பருப்பு குழம்புல எக்கச்சக்கமான வெரைட்டீஸ் இருக்கு. பிறந்த குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடக்கூடியது பருப்பு குழம்பு தான். சுடு சாதத்தில் பருப்பு குழம்பு ஊத்தி மேல கொஞ்சமா நெய் ஊத்தி சாப்பிட்டா போதும் டேஸ்ட் செமையா இருக்கும். நீங்க எங்கேயாவது வெளியில் போயிட்டு வந்தீங்கன்னா டக்குனு இட்லி தோசை சாதத்துக்கு இப்ப நம்ம செய்யப் போற இந்த அவசர பருப்பு குழம்பு வச்சு சாப்பிடலாம். நீங்க சட்னி செய்வதற்கு கூட கொஞ்சம் லேட் ஆகும் ஆனா இந்த பருப்பு குழம்பு செய்ய ரொம்ப நேரம் ஆகவே ஆகாது ரொம்பவே சீக்கிரமா செஞ்சு முடிச்சிடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Quick Paruppu Kulambu
Yield: 4
Calories: 328kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசிப்பருப்புஅல்லது துவரம் பருப்பு
  • 2 தக்காளி
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 1 சிறிய குழிகரண்டி இட்லி மாவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • கருவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • முதலில் ஒரு குக்கரில் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பை நன்கு கழுவி சுத்தம் செய்து சேர்த்துக் கொள்ளவும்
  • பிறகு வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும். வெட்டி வைத்துள்ள வெங்காயம் மற்றும் தக்காளியை பருப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாயையும் கீறி சேர்த்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, குழம்பு மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும்
  • இறுதியாக இட்லி மாவு சேர்த்து நன்றாக கலக்கி குக்கரில் இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்
     
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து பருப்புடன் சேர்த்தால் சுவையான அவசர பருப்பு குழம்பு தயார்.
     

Nutrition

Serving: 400g | Calories: 328kcal | Carbohydrates: 79g | Protein: 23g | Sodium: 6.9mg | Potassium: 1.7mg | Vitamin C: 7.9mg | Calcium: 7mg | Iron: 1mg

இதையும் படியுங்க : ருசியான இந்த கோவைக்காய் சாம்பார் வச்சு பாருங்க. சாம்பார்ன்னா இப்படித்தான் இருக்கணும்னு எல்லோரும் உங்கள பாராட்டுவாங்க!!!