இயற்கையாகவே இரும்புச்சத்து நிறைந்த கேழ்வரகு சுண்டல் ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

கம்பு, திணை, கேழ்வரகு போன்ற தானிய வகைகளில் கேழ்வரகு கொண்டு செய்யப்படும் இந்த கேழ்வரகு சுண்டல் ரொம்பவே அசத்தலான சுவையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஆகும். தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த கேழ்வரகு கார புட்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். கேழ்வரகு மாவினை வேக வைத்து தாளிப்பு கொடுத்து செய்யக்கூடிய இந்த கேழ்வரகு சுண்டல் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள் எனவே இந்த ஆரோக்கியம் மிகுந்த கேழ்வரகு சுண்டல் செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

குழந்தைகள் மட்டும் தான் இந்த கேழ்வரகு சுண்டல் சாப்பிட வேண்டுமா என்று கேட்டால், நிச்சயம் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள் கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கேழ்வரகு சுண்டல் சாப்பிடலாம்.  இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.  கேழ்வரகில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள் உறுதிக்கு உதவும். கேழ்வரகு  சுண்டல், கேழ்வரகு களி, கேழ்வரகு கஞ்சி, எப்படி நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி தான். கேழ்வரகு  சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

கேழ்வரகு சுண்டல் | Raagi Sundal Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, முதியவர்கள்கூட வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் இந்த கேழ்வரகு சுண்டல் சாப்பிடலாம்.  இரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது.  கேழ்வரகில் உள்ள கால்சியம், நம் எலும்பு, பற்கள்உறுதிக்கு உதவும். கேழ்வரகு  சுண்டல், கேழ்வரகுகளி, கேழ்வரகு கஞ்சி, எப்படி நீங்கள் உணவில் சேர்த்துக் கொண்டாலும் சரி தான். கேழ்வரகு  சாப்பிடும் பழக்கத்தை கொண்டு வாருங்கள். உடல் ஆரோக்கியத்திற்குநல்லது.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Raagi Sundal
Yield: 4
Calories: 23kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் ராகி மாவு (கேழ்வரகு)
  • 1/2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு
  • 1 டீஸ்பூன் துருவிய தேங்காய்
  • 1 கேரட் சிறியது
  • 2 பச்சை மிளகாய்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

தாளிக்க

  • 1/2 டீஸ்பூன் நெய்
  • டீஸ்பூன் வெண்ணெய்
  • கடுகு தேவையான அளவு
  • பெருங்காயம் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் உடைத்த உளுந்தம்பருப்பு
  • கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை

  • கேரட்டை துருவிக் கொள்ளவும், பச்சை மிளகாயை கொள்ளவும். பொடியாக நறுக்கி ஒரு கப் நீரில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு அதில் கொதிக்க வைத்த தண்ணீர் தேவையான அளவு ஊற்றி கரண்டியால் மாவை கெட்டியாக கிளறவும். ஆறியதும் கட்டியின்றி பிசைந்துகொள்ளவும்.
  • கையில் எண்ணெய் தடவிக்கொண்டு, மாவை எடுத்து சிறு சிறு உருண்டைகளாக (பட்டாணி அளவு) உருட்டி, 8 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, ப.மிளகாய் சேர்த்துவதக்கவும்.
  • அதில் ராகி உருண்டைகளைச் சேர்த்துக் கிளறி, தேங்காய் மற்றும் கேரட் துருவல், எலுமிச்சைச் சாறு பிழிந்து பரிமாறவும்.
  • சூப்பரான சத்தான கேழ்வரகு சுண்டல் ரெடி

Nutrition

Serving: 100g | Calories: 23kcal | Protein: 2.5g | Fat: 1g | Sodium: 5.6mg | Potassium: 132mg | Calcium: 35mg