எவ்வளவு செய்தாலும் காலியாகும் ருசியான முள்ளங்கி ப்ரை இப்படி செஞ்சி பாருங்கள்!

- Advertisement -

நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லது வேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர் சுத்தமாக விரும்பமாட்டார்கள். முள்ளங்கி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும். முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது.

-விளம்பரம்-

முள்ளங்கி விரும்பாதவர்கள் பலர், ஆனால் முற்றிலும் வித்தியாசமான முறையில், சுலபமாக செய்யக்கூடிய ஒரு முள்ளங்கி ஃப்ரை ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். மிஸ் பண்ணாமல் கட்டாயம் ஒரு வாட்டி இதை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

Print
No ratings yet

முள்ளங்கி ஃப்ரை | Radish Fry Recipe In Tamil

நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லதுவேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர்சுத்தமாக விரும்பமாட்டார்கள். முள்ளங்கி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும். முள்ளங்கியில்அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது.செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு,மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது. முள்ளங்கியானது சிறுநீரை நன்குபெருகச் செய்கிறது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Radish Fry
Yield: 4
Calories: 19kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 200 கிராம் முள்ளங்கி
  • 6 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1/2 ஸ்பூன் சோம்பு
  • 1/4 ஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மல்லித் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 கரம் மசாலா
  • உப்பு
  • கருவேப்பிலை
  • கொத்தமல்லி தழை

செய்முறை

  • முதலில் 200 கிராம் அளவு முள்ளங்கியை எடுத்து தோல் சீவி, கழுவி வட்ட வடிவில் வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
  • இது அப்படியே இருக்கட்டும். 5 லிருந்து 6 பல் பூண்டை தோலுரித்து ஒன்றும் இரண்டுமாக இடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் அப்படியே இருக்கட்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அது சூடானதும் சோம்பு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, சின்ன வெங்காயம் – 10, பொடியாக நறுக்கியது, இவைகளை சேர்த்து வதக்கவேண்டும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் மீடியம் சைஸ் தக்காளி – 1, பொடியாக நறுக்கி போட்டு வெங்காயம் தக்காளி இரண்டும் சேர்ந்து முற்றிலும் வதங்கிவிட வேண்டும்.
  • அடுத்த படியாக நறுக்கி வைத்திருக்கும் முள்ளங்கியை கடாயில் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் வரை இந்த முள்ளங்கி கடாயில் இருக்கும் எண்ணெயில் வதங்க வேண்டும். நன்றாக கரண்டியை வைத்து கிளறிக் கொண்டே இருங்கள்.
  • அடுத்த படியாக மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன், மிளகாய்தூள் – 1ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், கரம் மசாலா – 1/4 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, பொடித்து வைத்திருக்கும் பூண்டு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள்.
  • இறுதியாக 2 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீரைத் தெளித்து, ஒரு மூடி போட்டு முள்ளங்கி பாதி அளவு வெந்தவுடன் மூடியை எடுத்துவிட்டு நன்றாக எண்ணெயில் வதக்கி எடுத்தால் கமகம வாசத்தோடு முள்ளங்கி ஃப்ரை தயார்.
  • இறுதியாக கருவேப்பிலை கொத்தமல்லி தழைகளைத் தூவி சுடச்சுட சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டாலும் சூப்பராக இருக்கும். தயிர் சாதம், சாம்பார் சாதத்திற்கு சைட் டிஷ் ஆகவும் சூப்பராக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 19kcal | Carbohydrates: 3.9g | Protein: 0.8g | Sodium: 39mg | Potassium: 233mg | Vitamin A: 7IU | Vitamin C: 14.8mg | Calcium: 25mg

இதையும் படியுங்கள் : முள்ளங்கி உருளைக்கிழங்கு சேர்த்து இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான பொரியல் ரெசிபி!